For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னது இந்திய பெருங்கடலில் பயங்கர நிலநடுக்கமா? பிரதமருக்கு கேரளாவில் இருந்து ஒரு கடிதம்

இந்திய பெருங்கடலில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்றும் அதனால் 11 நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரளாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் பரபரப்பை கிளப

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய பெருங்கடலில் இந்த ஆண்டுக்குள் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேரளாவைச் சேர்ந்த ஈஎஸ்பி தொடர்பான நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது.

கேரளத்தை சேர்ந்த பூமி மற்றும் விண்வெளியில் நிகழும் மாற்றங்கள் தொடர்பான அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இந்திய பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மிகவும் மோசமான இந்த நிலநடுக்கம் ஆசிய கண்டனத்தின் மொத்த கடற்கரை பகுதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

Kerala research centre warns about earthquake in Indian Ocean

கடற்கரையின் எல்லையையே மாற்றி அமைக்கும் அளவுக்கு இந்த நிலநடுக்கம் பாதிப்பை உண்டு செய்யும். இந்த நிலநடுக்கத்தால் இந்தியா, ஜப்பான், சீனா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட 11 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த நிலநடுக்கத்தின் போது மணிக்கு 120 கி.மீ முதல் 180 கி.மீ. வரை புயல் காற்று வீசக்கூடும். துறைமுகப் பகுதிகளில் கன மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதால் அது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

English summary
Kerala research association for Earth and Space prediction writes letter to PM that before Dec 2017, there will be an earth quake in Indian Ocean.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X