தமிழகத்திலிருந்து வரும் பழம், காய்களில் பூச்சி மருந்து.. கேரளப் புகாரில் உண்மை இருக்கிறதா?
திருவனந்தபுரம்: தமிழகத்திலிருந்து வரும் வேளாண் விளை பொருட்களில் அதிக அளவில் பூச்சி மருந்து கலந்திருப்பதாக கேரளா சொல்லும் புகாரில் உண்மை இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை மிகைப்படுத்தப்பட்ட புகார் என்றும், இது கேரள அரசுக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது.
கேரள உணவுப் பாதுகாப்பு கமிஷனர் அனுபமா என்பவர், மே 20ம் தேதி தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அனுப்ப்படும் வேளாண் விளை பொருட்களில் அதிக அளவு பூச்சி மருந்து கலந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
மிக மிக அதிக அளவில் தமிழக விவசாயிகள் வேதிப் பொருட்களையும், பூச்சி மருந்தையும் பயிர்களில் கலப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் தமிழகத்திலிருந்து வரும் பொருட்கலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 5 முதல் பத்து மடங்கு பூச்சி மருந்து கலந்திருப்தபாகவும் அவர் கூறியிருந்தார்.

3 பேர் கமிட்டி ஆய்வு...
இதுதொடர்பாக கேரளாவிலிருந்து 3 பேர் கொண்ட கமிட்டி ஒன்றும் தமிழகத்திற்கு விஜயம் செய்து ஆய்வும் நடத்தியது. இதுகுறித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் அனுபமா கூறியிருந்தார்.

மிகைப்படுத்தப் பட்ட புகார்...
இது தொடர்பாக தி நியூஸ் மினிட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி ஒன்றில், கரேரலாவின் இந்தப் புகாரில் சத்து இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவர் சொல்வது மிகைப்படுத்தப்பட்ட புகாராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்தப் புகாரில் அடிப்படை உண்மை இல்லை என்றும் கூறப்படுகிறது.

அறிக்கை...
இதுதொடர்பாக கேரள விவசாயப் பல்கலைக்கழகமும், கேரளா அனுப்பிய 3 பேர் கொண்ட கமிட்டியின் அறிக்கையும் இதை நிரூபிப்பதாக உள்ளது.

திராட்சையில் மட்டும்...
கேரள விவசாயப் பல்கலைக்கழகம், அக்டோபர், டிசம்பரில் நடத்திய ஆய்வின் முடிவில், 17 வகையான பழ வகைகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் பச்சை திராட்சையில் மட்டுமே பூச்சி மருந்து கலந்திருப்பதாக தெரிய வந்ததாம். மற்றவை நார்மலாகவே இருந்துள்ளன.

அனுமதிக்கப்பட்ட அளவே...
பச்சை திராட்சையிலும் கூட க்ளோரோபைரிபோஸ் என்ற பூச்சி மருந்தின் அளவானது 0.5 பிபிஎம் என்ற அளவிலேயே இருந்துள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவேயாகும்.

காய்கறிகள்...
மேலும் 34 வகையான காய்கறிகளை பரிசோதித்ததில், 4-ல் மட்டுமே பூச்சி மருந்து இருந்தது தெரிய வந்தது. அதுவும் கூட அனுமதிக்கப்பட்ட அளவில்தான். அவை மிளகாய், பச்சை மிளகாய், கீரை மற்றும் கறிவேப்பிலை ஆகியவை. மற்றவற்றில் பூச்சி மருந்தே இல்லையாம்.

பீதி தேவையில்லை...
மேலும் கேரள அரசு இதுகுறித்து பீதி அடையத் தேவையில்லை என்றும் கேரள விவசாய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனராம். இதை கேரள அரசு அப்பட்டமாக ம்றைத்துள்ளது.

ஆர்கானிக் விவசாயம்...
இருப்பினும் கேரள அரசு தனது பிடியில் நிலையாக இருக்கிறது. பூச்சி மருந்து இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறது. கேரளாவி்ல் ஆர்கானிக் விவசாயத்தை பிரபலப்படுத்தும் வகையிலேயே இதுபோல தவறான பிரச்சராம் மேற்கொள்ளப்படுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
-
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications