For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடிய விடிய பெட்ரூமில்.. பிணத்துக்கு பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த கணவர்.. கிலி கிளப்பும் கொல்லம்!!

பாம்புகளை ஏவி மனைவியை கொன்ற கணவர் வாக்குமூலம் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

கொல்லம்: உத்ராவை 2 முறை பாம்பு கொத்தியதை பார்த்து கொண்டே நின்றாராம் கணவர் சூரஜ்.. கொடிய விஷ பாம்பு என்பதால் வலி அதிகமாக இருந்திருக்கிறது.. அதனால் மனைவி துடிதுடித்து இறந்ததை அமைதியாக பார்த்து விட்டு, பிறகு அந்த சடலம் பக்கத்திலேயே விடிய விடிய உட்கார்ந்திருக்கிறார் சூரஜ்.. புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராததால் பெட்-ரூமை விட்டு வெளியே சென்றிருக்கிறார்.. இப்போது உத்ராவை கடித்த பாம்புக்கு போஸ்ட் மார்ட்டம் நடந்துள்ளது.. கேரள மாநிலத்திலேயே ஒரு பாம்புக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வது இதுதான் முதல்முறை!!

Recommended Video

    பாம்பை ஏவி விட்டு மனைவியை கொலை செய்த கணவன்

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா.. இவரது கணவன் சூரஜ்.. கல்யாணம் ஆகி 2 வருடம் ஆகிறது. ஒரு வயதில் மகன் இருக்கிறான். பறக்கோடு பகுதியில் இவர்கள் வசித்து வந்தனர். நகைக்காகவும், 2வது கல்யாணம் செய்து கொள்வதற்காகவும் மனைவியை பாம்புகளை ஏவி கொன்றுள்ளார் சூரஜ்!!

    மார்ச்-2 ம் தேதிதான் முதல்முறையாக உத்ராவை பாம்பு கடித்தது.. போராடி அவர் உயிரை பெற்றோர் மீட்டு கொண்டு வந்து தங்கள் வீட்டில் ஓய்வுக்காக அழைத்து சென்றனர். அந்த வீட்டுக்குதான் மே 7 ந்தேதி சூரஜ் சென்றிருக்கிறார்.

     "செத்தாலும் சரி.. அவளுக்கு கெட்ட பேர் வந்துடகூடாது" முகம் தெரியாத காதலிக்காக தூக்கில் தொங்கிய இளைஞர்

    உத்ரா

    உத்ரா

    திரும்பவும் பாம்பை ஏவிவிட்டு மனைவியை கொன்றிருக்கிறார் சூரஜ்.. முதல்முறை பெட்ரூமில் பாம்பு கடித்து உத்ரா அலறியபோது, சூரஜ்தான் அந்த பாம்பை பைக்குள் போட்டு வெளியே கொண்டு போயுள்ளார்.. இப்போது விசாரணையில், சூரஜ் வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறார் என தெரியவந்துள்ளது.

    பாம்பு ஸ்பெஷலிஸ்ட்

    பாம்பு ஸ்பெஷலிஸ்ட்

    உத்ராவை கொலை செய்வதற்காக கூகுளில் பாம்புகளை தேடி உள்ளார்... பிறகு பாம்பு பிடிப்பவர்கள் யார், யார் என்று யூடியூப் வீடியோக்களில் தேடி, இறுதியில் பாம்புகளை லாவகமாக கையாளும் சுரேஷ் என்பவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவரிடம் ஐடியாக்களை பெற்றுக் கொண்டு, அணலி என்ற ஒரு விஷபாம்பை வாங்கி உத்ரா வீட்டுக்கு முதல் முறை சென்றுள்ளார்.. அந்த முயற்சி தோல்வியடைந்ததும், 2வதுமுறையாக 10 ஆயிரம் கொடுத்து கருமூர்க்கன் என்ற இன்னொரு விஷ பாம்பை வாங்கி கொண்டு உத்ரா வீட்டுக்கு சென்றுள்ளார்.

    10 ஆயிரத்துக்கு பாம்பு

    10 ஆயிரத்துக்கு பாம்பு

    வீட்டில் எலி தொல்லை இருப்பதாக சொல்லியே இந்த 2 பாம்புகளையும் 10 ஆயிரம் ரூபாய் தந்து சுரேஷிடம் இருந்து வாங்கி உள்ளார். கடந்த 6-ம் தேதி ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு கொண்டுதான் இந்த கருமூர்க்கன் பாம்பை உத்ரா வீட்டுக்கு எடுத்து சென்றாராம்.. உத்ரா தூங்கும்போது, அந்த பாம்பை அவர் மீது தூக்கி வீசியுள்ளார்.. 2 முறை அந்த பாம்பு உத்ராவை கொத்தி உள்ளது.

    அலறல்

    அலறல்

    வாய் பேச முடியாத உத்ராவால் கத்தி அலறகூட முடியவில்லை.. படுக்கையிலேயே உயிர் பிரிந்துவிட்டது.. பாம்பு கடிப்பதையும், உத்ரா துடிப்பதையும் பார்த்து கொண்டே நின்றிருக்கிறார் சூரஜ்... கொடிய வகை பாம்பு என்பதால், அதன் வலியும் மிக கடுமையாக இருந்திருக்கிறது.. துடிதுடித்து உத்ரா இறப்பதையும் பார்த்து கொண்டே நின்ற சூரஜ், அந்த ரூமிலேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்துள்ளார். 8.30 மணிக்கெல்லாம் பாம்பை கடிக்க செய்துள்ளார்.. ஆனால் விடிய விடிய சடலம் பக்கத்திலேயே கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார்.

    பாட்டிலில் பாம்பு

    பாட்டிலில் பாம்பு

    புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் விடிகாலைதான் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.. போகும்போது பாம்பு கொண்டு வந்த பாட்டிலை வெளியே வீசிவிட்டு போயிருக்கிறார்..இப்படி ஒரு கொலையை நாடே பார்த்தது இல்லை.. உத்ரா கொலையின் அதிர்ச்சி இன்னமும் விலகிவில்லை. இப்போதைக்கு சூரஜ், மற்றும் பாம்புகளை தந்த சுரேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

    செல்போன்

    செல்போன்

    4 நாட்கள் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்... அந்த பாம்பு கொண்டு வந்த பாட்டிலை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.. அதேபோல பாம்பு பிடிக்கும் சுரே‌ஷுடன் சூரஜ் செல்போனில் பேசிய விவரங்களும் பெறப்பட்டுள்ளன.. உத்ராவை கடித்த பாம்புக்கும் போஸ்ட் மார்ட்டம் நடத்தப்பட்டது.

    போஸ்ட் மார்ட்டம்

    போஸ்ட் மார்ட்டம்

    அந்த பாம்பை உத்ரா குடும்பத்தினர் அன்றே அடித்து வீட்டுக்கு பின்புறம் புதைத்திருந்தனர்.. இப்போது வழக்கு விசாரணைக்காக பாம்பை தோண்டி போஸ்ட் மார்ட்டம் செய்தனர்.. இதற்காக நிபுணர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.. அடித்து கொன்று புதைத்தால் பாம்பின் உடல் அழுகி போயிருந்தது. எனினும் அந்த பாம்ம்பின் பல் இந்த வழக்குக்கு தேவை என்பதால் அதனை எடுத்துள்ளனர். மற்ற பாகங்கள் டெஸ்ட்டுக்காக அனுப்பிப் வைக்கப்ட்டுள்ளது.

    English summary
    kerala snakebite: Woman's death near kollam, police gets custody of husband
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X