நேற்று தமிழ்நாடு.. இன்று கேரளா! வட மாநில பல்கலைகளில் தொடர்ந்து தாக்கப்படும் மாணவர்கள் - மபி பயங்கரம்

“நாங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் சென்ற அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்று கூறி எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஆனால், தடை செய்யப்பட்ட பகுதி என்று எந்த பலகையும் வைக்கவில்லை.”

Subscribe to Oneindia Tamil

போபால்: கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மத்திய பிரதேச பல்கலைக்கழகத்தில் கேரளாவை சேர்ந்த மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளார்கள்.

மத்திய பிரதேச மாநிலம் அமர்கந்தக் பகுதியில் அமைந்து இருக்கிறது இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகம். IGNTU என்று அழைக்கப்படும் இந்த பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

அந்த வகையில் கேரளாவை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மத்திய பிரதேசத்தில் தங்கி இருந்து இந்த பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில்தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனுமதி மறுக்கப்பட்ட பகுதி

அனுமதி மறுக்கப்பட்ட பகுதி

பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கேரள மாணவர்கள் கடந்த 10 ஆம் தேதி பாதுகாப்பு பணியாளர்களால் தாக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. பல்கலைக்கழக வளாகத்தில் மெயின் கேட் அருகே தண்ணீர் தொட்டி என்பது அனுமதி மறுக்கப்பட்ட பகுதியாக உள்ள நிலையில் அங்கு மாணவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.

பாதுகாவலர்கள் தாக்குதல்

பாதுகாவலர்கள் தாக்குதல்

இதனை கண்ட பல்கலைக்கழக பாதுகாவலர்கள் மாணவர்களை பார்த்ததும் சத்தமிட்டதுடன் சரிமாரியாக தாக்குதலில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள். பாதுகாவலர்கள் நடத்திய தாக்குதலில் கேரள மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் 4 கேரள மாணவர்கள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுகாயமடைந்த 4 பேர்

படுகாயமடைந்த 4 பேர்

நசீல், அபிஷேக், அத்னான், ஆதில் ரஷிப் ஆகிய 4 கேரள மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்களை தாக்கிய பாதுகாப்பு பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மபி IGNTU பல்கலையில் செயல்பட்டு வரும் கேரள பிரடெர்னிட்டி என்ற மாணவர் அமைப்பு வலியுறுத்தி இருக்கிறது.

மாணவர் விளக்கம்

மாணவர் விளக்கம்

பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட கேரள மாணவர்களில் ஒருவர் தனியார் ஊடகத்திடம் தெரிவிக்கையில், "நாங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் சென்ற அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்று கூறி எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஆனால், தடை செய்யப்பட்ட பகுதி என்று எந்த பலகையும் வைக்கவில்லை." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+