முத்தப் போராட்டத்துக்கு ஆதரவு... கட்டிப்பிடி போராட்டம் நடத்திய கல்லூரி மாணவ, மாணவிகள் சஸ்பெண்ட்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் கல்லூரியில் நடந்த கட்டிபிடி போராட்டத்தில் பங்கேற்ற 10 மாணவ, மாணவிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோழிக்கோட்டில் ஒரு ஹோட்டலில் மாணவ, மாணவிகள் கட்டிபிடித்து கும்மாளம் இடுவதாக வெளியான தகவலை தொடர்ந்து அந்த ஹோட்டலை பாஜக இளைஞர் அணியினர் சூறையாடினர். இதை கண்டித்து கொச்சியில் முத்த பேராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜ, காங் உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தை நடத்த கூடாது என தெரிவித்தனர்.

போராட்டத்தில் பங்கேற்க கொச்சி மரைன்டிரைவ் பகுதியில் ஏராளமான இளம் பெண்களும், ஆண்களும் குவிந்தனர். இதை தடுக்க சிவசேனா உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதற்கிடையே முத்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை கைது செய்ததை கண்டித்து எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரி மாணவ, மாணவிகள் கட்டிபிடி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இந்த போராட்டத்தை நடத்த கூடாது என கல்லூரி முதல்வர் பிரான்ஸசிஸ் எச்சரிக்கை செய்தார்.
இருப்பினும திட்டமிட்டப்படி போராட்டத்தை நடத்துவோம் என மாணவர்கள் தெரிவித்தனர். அதன் படி 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக பத்து மாணவ, மாணவிகளை ஒரு வார காலம் சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications