Uttarakhand Floods: உத்தரகண்ட்டில் தென்னிந்திய சுற்றுலா பயணிகள் 28 பேர் மாயம்! வெள்ளம்+ நிலச்சரிவால் அதிகரிக்கும் அச்சம்
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நேற்றைய தினம் மேக வெடிப்பு காரணமாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் மிக மோசமான நிலச்சரிவும் ஏற்பட்டது. இதுவரை இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே உத்தரகண்ட்டிற்குச் சுற்றுலா சென்றிருந்த 28 கேரள சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளது இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
வட இந்தியாவில் இமயமலைக்கு அருகே அமைந்துள்ள மாநிலம் உத்தரகண்ட். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உத்தரகண்ட் மாநிலத்திற்கு மக்கள் சுற்றுலா செல்வார்கள். உத்தரகண்ட் மாநிலத்திற்கு பெரும்பாலும் ஆன்மீக சுற்றுலாவுக்குச் செல்வோரே அதிகம்.

28 பேர் மாயம்
உத்தரகண்ட்டில் நேற்றைய தினம் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பால் அங்குக் குறுகிய நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்து. மேலும், அதைத் தொடர்ந்த அங்கு நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதற்கிடையே இதில் சிக்கி கேரளாவைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. அவர்களில் 20 பேர் மகாராஷ்டிராவில் வசிக்கும் கேரள மக்கள் என்றும், எஞ்சிய எட்டுப் பேர் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
மாயமானவர்களில் ஒரு தம்பதியரின் மகன், தனது பெற்றோரிடம் கடைசியாக வெள்ளம் ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்பு காலை 8.30 மணியளவில் பேசியுள்ளார். அப்போது அவர்கள் உத்தரகாசியில் இருந்து கங்கோத்ரிக்குப் புறப்படுவதாகத் தெரிவித்ததாகக் கூறினார். அவர்கள் சென்ற வழியில்தான் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அந்த மகன் குறிப்பிட்டார்.
தொடர்பு கொள்ள முடியவில்லை
ஹரித்வாரைச் சேர்ந்த ஒரு டூர் நிறுவனம் இந்த சுற்றுலாவை ஏற்படு செய்திருந்தது. 10 நாட்கள் உத்தரகண்ட்டின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டுள்ளனர். அந்த சுற்றுலா நிறுவனத்திற்கும் கூட கேரள சுற்றுலாப் பயணிகள் எங்கு இருக்கிறார்கள் என எதுவும் தெரியவில்லையாம். இது தொடர்பாக மாயமான தம்பதியின் உறவினர் பெண் கூறுகையில், "எங்களுக்குப் பயமாக இருக்கிறது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அந்த சுற்றுலா நிறுவனத்திடம் கேட்டாலும் கூட அவர்கள் பதில் சொல்ல மறுக்கிறார்கள்.
தெளிவாக தெரியவில்லை
அந்த பகுதியில் மொபைல் நெட்வோர்க் இல்லை.. மேலும் அங்கு மின் இணைப்பும் சீராக இல்லாததால் சார்ஜ் தீர்ந்திருக்கலாம் என்று நினைக்கிறோம். அவர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்தாலே போதும். ஆனால், அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியாததால் தான் அச்சமாக இருக்கிறது" என்றார்.
5 பேர் பலி
செவ்வாய்க்கிழமை பிற்பகல் உத்தரகாண்டில் சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட தாராலி பகுதியில் மேக வெடிப்பு காரணமாகக் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக அங்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 பேர் மாயமாகியுள்ளனர். இதுவரை 150 பேர் இடிபாடுகளில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளனர். இந்த மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளால் தாராலி கிராமத்தின் கிட்டத்தட்டப் பாதி பகுதி சேறு, குப்பைகளால் மூடப்பட்டுள்ளது.
கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரிக்குச் செல்லும் வழியில் தாராலி கிராமம் ஒரு முக்கிய பகுதியாகும். இங்குப் பல ஹோட்டல்கள் மற்றும் ஹோம்களும் உள்ளன. வழக்கமாகச் சுற்றுலா செல்லும் மக்கள் இந்த கிராமத்தில் தான் தங்கிச் செல்வார்கள். இங்கு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
-
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications