கேரளாவுக்கு டூர் போறீங்களா? மிக கனமழை பெய்யுமாம்.. இந்திய வானிலை மையம் வார்னிங்!
கேரளாவில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மும்பை, கோவா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளான கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

கேரளாவுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் கேரளாவில் மிக கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. சுற்றுலா பயணிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு
நாளை ஜூலை 13 ம் தேதி முதல் பல பகுதிகளில் 14 முதல் 20 செ.மீ., வரை மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

60 கிமீ வேகத்தில் காற்று
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மணிக்கு, 35 முதல் 60 கி.மீ., வேகத்தில் மேற்கு நோக்கி காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை
அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்
மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மலைப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும்படியும் இந்திய வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது. கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு மலப்புரம், கன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஷார் நிலையில்
இதன்காரணமாக பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13 முதல் அனைத்து தாலுகா கட்டுப்பாட்டு அறைகளும் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மிக கனமழை எச்சரிக்கை
ஏற்கனவே மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்திற்கும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications