நதிநீர் இணைப்பு திட்டத்தால் கேரளா பாலைவனமாகும்: பூச்சாண்டி காட்டும் சாண்டி
திருவனந்தபுரம்: நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினால், கேரள நதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.
லோக்சபாவின் கேள்வி நேரத்தில் பதிலளித்து பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, "தேசிய நதிகளை இணைத்தால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும், மின்சார உற்பத்திக்கு வழிவகுக்கும்" என்று கூறினார்.

இது குறித்து, கேரள முதல்வர் உம்மன் சாண்டி சட்டசபையில் கூறியதாவது: தேசிய நதிகள் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வு நடத்த நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
நதிகளை இணைப்பதன் மூலம் மாநிலத்திற்கு மாநிலம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கேரளாவில் உள்ள நதிகளை தமிழகத்துடன் இணைத்தால் அதற்கு கேரள அரசு சம்மதிக்காது. தமிழகத்துடன் கேரள நதிகளை இணைத்தால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். இதனால் மண்வளம் பாதிக்கப்படும். கேரளாவில் ஓடும் ஆறுகளான பம்பா, அச்சன் கோவில் ஆறுகள் தண்ணீரின்றி வறண்டுவிடும்.
நதிகளை இணைத்தால் எதிர்காலத்தில் கேரளாவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். கேரளாவில் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் நிலை ஏற்படும். காடுகள் வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கும். நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு எதிராக, 2003ஆம் ஆண்டே கேரள சட்டசபையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications