ஒரு தலைக் காதல்.. கேரளாவில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட இளம் பெண்.. இளைஞர் கைது.. பரபரப்பு வாக்குமூலம்
கண்ணனூர்: கேரளாவில் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
கேரளா மாநிலம் கண்ணனூர் மாவட்டம் கூத்து பறம்பு அருகே உள்ள பானூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரியா (23). இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார்.
விஷ்ணுபிரியாவின் பாட்டி ஒருவர் அண்மையில் மரணமடைந்துவிட்டார். இதனால் விஷ்ணுபிரியாவின் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் அக்டோபர் 22 ஆம் தேதி இறுதிச் சடங்கிற்காக சென்றுவிட்டனர்.

விஷ்ணுபிரியா
அப்போது விஷ்ணு பிரியா வீட்டில் தனியாகவே இருந்துள்ளார். இந்த நிலையில் இறுதிச் சடங்கு முடித்துக் கொண்டு அவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது கதவு திறந்திருந்தது. கதவை திறந்து போட்டுவிட்டு இவள் என்ன செய்கிறாள் என கூறிக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

கழுத்து துண்டானது
அப்போது விஷ்ணுபிரியா கழுத்து துண்டான நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விஷ்ணுபிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

18 இடங்களில் வெட்டு
பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. இதில் விஷ்ணுபிரியாவுக்கு 18 இடங்களில் பலமான வெட்டு காயம் இருந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையில், கூத்துபறம்பு மானந்தேரி பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஷியாம்ஜித் என்பவரின் போனிலிருந்து விஷ்ணுபிரியாவின் போனுக்கு கடைசியாக அழைப்பு வந்தது தெரியவந்தது.

ஒரு தலையாக காதல்
விசாரணையில் விஷ்ணுபிரியாவை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால் விஷ்ணுபிரியாவோ அந்த இளைஞரை காதலிக்க மறுத்துவிட்டார். போலீஸார் ஷியாம்ஜித்திடம் விசாரித்ததில் அவர் விஷ்ணுபிரியா எங்கே தன்னை விட்டு போய் விடுவாரோ என்ற பயத்தில் கொலை செய்ததாக ஷியாம்ஜித் ஒப்புக் கொண்டார்.

ஷியாம்ஜித்
ஷியாம்ஜித் வெட்டிய போது கைகளை கொண்டு தடுத்ததால் விஷ்ணுபிரியாவில் கைகளில் வெட்டுக் காயம் உள்ளது. ஷியாம்ஜித், விஷ்ணுபிரியாவின் வீட்டுக்குள் நுழைந்த போது அவர் யாருடனோ ஒரு தோழியுடன்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஷியாம்ஜித் என விஷ்ணுபிரியா அலறிய சப்தம் கேட்டதாக அந்த தோழி போலீஸில் தெரிவித்ததால் ஷியாம்ஜித் சிக்கினார். அது போல் விஷ்ணுபிரியாவின் வீட்டருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் விஷ்ணுபிரியாவின் வீட்டிற்கு டிசர்ட் அணிந்திருந்த ஒரு நபர் வந்ததை அறிந்தனர். இந்த விதத்திலும் ஷியாம்ஜித் போலீஸாரின் ரேடாரில் வந்தார்.

அரிவாள்- சுத்தியல்
விஷ்ணுபிரியாவின் கழுத்தை அரிவாள் மற்றும் சுத்தியல் கொண்டு கொலை செய்துள்ளார். இதன் பிறகு அந்த ஆயுதங்களில் இருந்த ரத்த காயங்களை சுத்தம் செய்துள்ளார். பின்னர் அதை கொண்டு சென்று தனது தந்தையின் ஹோட்டலில் வைத்திருந்தார். இதை போலீஸார் கைப்பற்றினர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சத்யா எனும் கல்லூரி மாணவி ஒரு தலை காதலால் சதீஷ் என்ற இளைஞரால் ஓடும் ரயில் முன் தள்ளி விடப்பட்டு கொலை செய்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications