ஏப்ரல் 1 முதல் மண்ணெண்ணெய் நேரடி மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து மண்ணெண்ணெய்க்கான மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயுவுக்கான மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான போலி இணைப்புகள் ரத்து செய்யப்பட்டு, அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது. அதேபோல் மண்ணெண்ணெய்க்கு பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடி மானியம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மண்ணெண்ய்க்கான மானியம் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அரியானா, ராஜஸ்தான் இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குறிப்பிட்ட நகரங்களில் இத்திட்டம் முதலில் அமலுக்கு வருகிறது.
தற்போது பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் 12 ரூபாய்க்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கும் பயனாளிகள், இனி லிட்டர் 43 ரூபாய்க்கு வாங்க வேண்டும். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத் தொகையான மானியம் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.
நேரடி மானியத் திட்டம் மூலம் 4 கோடி போலியான சமையல் எரிவாயு நுகர்வோர் களையெடுக்கப்பட்டு, ரூ.10 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications