அடங்காத காலிஸ்தான் தனிநாடு பயங்கரவாதிகள்- ஹிமாச்சல் சட்டசபை வாசலில் கொடியை பறக்கவிட்டு அட்டூழியம்
சிம்லா: சீக்கியர்களுக்கு காலிஸ்தான் தனிநாடு பயங்கரவாத கும்பல், ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபை வாசலில் அந்த இயக்கத்தின் கொடிகளை பறக்கவிட்டிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
சீக்கிய மதத்தினருக்கு தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தியது காலிஸ்தான் இயக்கம். 1980களில் பிந்தரன்வாலே தலைமையிலான காலிஸ்தான் தீவிரவாதிகள், பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு தாக்குதல்களை நடத்தினர். இதனால் அப்போது பஞ்சாப் மாநிலமே பற்றி எறிந்தது.

பின்னர் 1984-ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, பஞ்சாப் பொற்கோவிலுக்குள் பதுங்கி இருந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் அனைவரும் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் வகையில் சீக்கிய பாதுகாவலர்களால் பிரதமராக இருந்த இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். பின்னர் காலிஸ்தான் பயங்கரவாதிகள் வெளிநாடுகளுக்கு சென்று இந்த இயக்கத்தை உயிர்ப்பித்து வருகின்றனர்.
தற்போது பாகிஸ்தான் ஆதரவுடன் காலிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் தலையெடுக்க முயற்சிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹரியானாவில் பயங்கர ஆயுதங்களுடன் காலிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது ஹிமாச்சல பிரதேசத்தில் தங்களது கைவரிசையை காலிஸ்தான் தீவிரவாதிகள் காட்டி உள்ளனர். ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபையின் கதவுகளில் காலிஸ்தான் இயக்க கொடிகளை பயங்கரவாதிகள் பறக்கவிட்டுள்ளனர். இது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த கொடிகள் அகற்றப்பட்டன.
#WATCH Khalistan flags found tied on the main gate & boundary wall of the Himachal Pradesh Legislative Assembly in Dharamshala today morning pic.twitter.com/zzYk5xKmVg
— ANI (@ANI) May 8, 2022
இச்சம்பவத்துக்கு மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், தர்மசாலாவில் சட்டசபை கதவுகளில் காலிஸ்தான் கொடிகளைப் பறக்க்கவிட்டது கடும் கண்டனத்துக்குரியது. தர்மசாலாவில் சட்டசபையின் குளிர்கால கூட்டம் மட்டும் நடைபெறும். ஆகையால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.
ஏற்கனவே டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது டெல்லி செங்கோட்டையில் இதேபோல் காலிஸ்தான் பயங்கரவாதிகள் கொடி ஏற்றப்பட்டது பெரும் வன்முறையாக வெடித்தது. டெல்லி விவசாயிகள் போராட்டத்தையே காலிஸ்தான் இயக்கம்தான் தூண்டிவிடுகிறது என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications