பைபிள் படிக்காத சிறார்களை உத்தரத்தில் தொங்க விட்டு அடித்த ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள்
இதைத்தான் போதித்தாரா இயேசுநாதர்?.. பைபிள் படிக்காத சிறார்களை தொங்க விட்டு அடித்த ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள்
நோய்டா: உத்திரப்பிரதேசத்தில் பைபிள் படிக்காத சிறுவர்களை ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் உத்தரத்தில் கட்டித் தொங்கவிட்டு அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் நோய்டாவில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள இரண்டு ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கிப் படித்து வரும் சிறார்கள், சரியாக பைபிள் படிக்கவில்லை என்பதால் அவர்களை உத்தரத்தில் கட்டித் தொங்க விட்டு அதன் நிர்வாகிகள் அடித்துள்ளனர்.
இதுகுறித்து வந்த புகாரைத் தொடர்ந்து இரண்டு இல்லங்களிலும் தங்கிப் படித்து வந்த 30 சிறார்களை போலீஸார் ரெய்டு நடத்தி மீட்டுள்ளனர்.
ஏழைக் குழந்தைகள்...
இந்தக் குழந்தைகள் அனைத்தும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பலர் ஆதரவற்றோர். இவர்களை கட்டாயமாக மதம் மாற்றம் செய்துள்ளதாகவும் போலீஸாருக்குப் புகார்கள் வந்துள்ளன.
புகார்...
பாதிக்கபட்ட 9 வயது சிறுவன் ஒருவனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த இல்லங்களை இம்மானுவேல் சேவா குழுமம் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது.
சித்ரவதை...
இவர்களை மின்விசிறியின் உத்தரத்தில் கட்டி தொங்க விட்டு கொடூரமாக அடித்து சித்திரவதை செய்துள்ளனர். பட்டினி போட்டுள்ளனர். பைபிளைப் படிக்காவிட்டால் இதே கதிதானாம்.
சிறைகளான அறைகள்...
மேலும் கடந்த 3 வருடமாக கரப்பான் பூச்சிகள் நிரம்பிக் கிடக்கும் சாப்பாடுதான் கொடுத்து வந்துள்ளனர். அழுக்கடைந்த அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மிக மோசமான சூழலில் இவர்கள் இருந்து வந்துள்ளனர். சிறையைப் போல இவர்களது நிலை இருந்துள்ளது.
கட்டாயம்...
மாதம் ஒருமுறை அதுவும் கால் மணி நேரம் மட்டுமே இவர்களுக்கு பெற்றோரைப் பார்க்க அனுமதி தரப்பட்டுள்ளது. அங்கு பைபிள் படிப்பது கட்டாயம். எப்போதும் பைபிள் படித்தபடியே இருக்க வேண்டும். பைபிளை முழுமையாக மனப்பாடம் செய்யும் வரை விட மாட்டார்களாம்.
பெல்ட் அடி...
உணவு, உடை ஆகியவற்றை வாங்க வரிசையில் வர வேண்டும். அப்போது பைபிள் வாசகத்தை சொல்ல வேண்டும். தவறாகச் சொன்னால் அடி உதை, சித்திரவதை தானாம். உணவும், உடையும் தர மாட்டார்களாம். பெல்டால் அடிப்பார்களாம்.
அம்பலம்...
ஜோஷுவா தேவராஜ் என்பவர் மூலம் தனது பிள்ளையை இங்கு சேர்த்ததாக அந்த சிறுவனின் தாயார் கூறியுள்ளார். தற்போது போலீஸ் புகார் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications