கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள்... டெல்லி தோல்விக்கு நானே பொறுப்பு: கிரண்பேடி
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு தானே காரணம் எனத் தெரிவித்துள்ளார் பாஜக முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட கிரண்பேடி. இதேபோல், ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கும் அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பம் முதலே ஆம் ஆத்மியின் கை ஓங்கியே உள்ளது. பாஜகவின் தோல்வி நிச்சயமாகி விட்டது.

இந்நிலையில், டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து பாஜகவின் முதல்வர் வேட்பாளரான கிரண்பேடி கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், ‘டெல்லி தேர்தல் முடிவுக்கு நானே பொறுப்பு. இந்த தேர்தல் முடிவுகள் மோடி அரசு மீதான மதிப்பீடாக கருத முடியாது. நானும், கெஜ்ரிவாலும் எதிரெதிர் அணிகளில் போட்டியிட்டோம். விளையாட்டில் எப்படி ஒருவர் மட்டுமே ஜெயிக்க முடியுமோ, அதே போல் தான் இதுவும்.
பாஜக வெற்றி பெற்றால் அது, தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் சேரும். ஆனால், தோல்வி ஏற்பட்டால் அதற்கு நான் மட்டுமே பொறுப்பு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
மேலும், அதிக இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள ஆம் ஆத்மிக்கு அவர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முழு மதிப்பெண்கள். வாழ்த்துக்கள். டெல்லியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்ற வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கிரண்பேடி இருவருமே காந்தியவாதி அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications