பாஜகவுக்காக கிரண் பேடி, சக்தி சின்ஹா பிரசாரம்
டெல்லி: டெல்லி மாநிலசட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை ஆதரித்து அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கிரண்பேடி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
நாட்டின் முதலாவது பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி, அன்னா ஹசாரேவின் லோக்பால் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டார். பின்னர் ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய அர்விந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து செயல்பட்டார்.

அக்கட்சியின் டெல்லி மாநில முதல்வர் வேட்பாளராகவும் கிரண்பேடியை கெஜ்ரிவால் அறிவிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் கிரண் பேடி அதை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலில் புதிய திருப்பமாக பாரதிய ஜனதாவை ஆதரித்து கிரண்பேடி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதேபோல் டெல்லி மாநில அரசில் தலைமைச் செயலர் பதவி வழங்கப்படாததால் ஓய்வு பெற்ற சக்தி சின்ஹாவும் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications