கே.ஜே.யேசுதாஸ், ஈஷா ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது!
பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த யோகா குரு சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட 7 பேருக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருதுகளை அறிவித்துள்ளது.
டெல்லி: நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த யோகா குரு சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட 7 பேருக்கு மத்திய அரசின் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் உயரிய அங்கீகாரமான பத்ம விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த குடிமக்களை தேர்வு செய்து மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால்இன்று அறிவிக்கப்பட்டன.

அதன்படி திரைத்துறையில் பல ஆண்டுகளாக கோலோச்சி வரும் பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு, நாட்டின் இரண்டாவது உயரிய கவுரமாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசு தேவ் உள்ளிட்ட 7 பேருக்கு மத்திய அரசின் பத்ம விபூஷண்கள் விருது வழங்கப்படவுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சரத்பவார், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த முரளிமனோகர் ஜோஷி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த உடுபி ராமச்சந்திர ராவ் ஆகியோரும் பத்ம விபூஷண் விருதுகளை பெறுகின்றனர்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுந்தர் லால் பட்வா மற்றும்
மேகாலயாவை சேர்ந்த முன்னாள் லோக்சபா சபாநாயகர் பிஏ.சங்மா ஆகியோருக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்படவுள்ளது. குடியரசு தினத்தன்று அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications