டாட்டூ போடும் போது கண்ட இடத்தில் கை.. திமிறினால் முதுகுதண்டுவடத்தில் ஊசி.. அதிர வைக்கும் சுதீஷ்!
கொச்சி: கேரளா மாநிலத்தில் தன்னிடம் டாட்டூ போட வரும் பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக டாட்டூ கலைஞர் கைது செய்யப்பட்டார்.
கொச்சியை சேர்ந்தவர் சுதீஷ். இவர் கடந்த 5 ஆண்டுகளாக டாட்டூ போடும் கடை நடத்தி வருகிறார். இவர் மலையாள நடிகர், நடிகைகளுக்கும், மற்ற விஐபிகளுக்கும் டாட்டூ போடுபவர்.
ஆரம்பத்தில் சிறியதாக தொடங்கிய கடையை பெரிய ஆட்களுடனான தொடர்பை கொண்டு திரைப்பிரபலங்கள் வந்து போடும் அளவுக்கு உயர்த்தினார். அவருக்கு சமூகவலைதள பக்கங்களில் 52 ஆயிரம் பாலோயர்கள் உள்ளனர்.

கை, கால், முகம்
கை, கால், முகம் என டாட்டூ வரைந்த காலம் போய் தற்போது அந்தரங்களிலும் சில பெண்கள் டாட்டூ வரைய தொடங்கிவிட்டனர். இதற்காக டாட்டூ ஸ்டியோவுக்கு சென்றால் அங்கு அந்த டாட்டூ கலைஞர் இவர்களிடம் அத்துமீறுவதாக சில புகார்கள் வந்தன. இந்த நிலையில் அதே போன்றதொரு பாலியல் புகார்கள் சுதீஷ் மீதும் வந்தன.

சுதீஷ் தலைமறைவு
இதுகுறித்து போலீஸார் விசாரிப்பதை அறிந்த சுதீஷ் கடந்த 4 நாட்களாக தலைமறைவானார். அவர் கொச்சியில் மறைந்திருந்த நிலையில் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், சுதீஷுக்கு எதிராக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் டாட்டூ ஸ்டுடியோவில் தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை 18 வயது பெண் ஒருவர் வெளியிட்டதால் இந்த பிரச்சினை பெரிதானது.

சுதீஷின் டாட்டூ ஸ்டுடியோ
கடந்த 3 ஆம் தேதி அந்த பெண் சமூகவலைதளங்களில் ஒரு பதிவை போட்டார். அதில் சுதீஷின் டாட்டூ ஸ்டுடியோவில் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறலை விளக்கினார். அதில், நான் சுதீஷின் டாட்டூ ஸ்டுடியோவுக்கு சென்றேன். அங்கு கூட்டம் இல்லாததால் அவர் என்னை கண்ட இடத்தில் தொட முயற்சித்தார்.

முட்டாள்தனம்
நான் அதை தடுத்தேன். உடனே அவர் எனது முதுகு தண்டுவடத்தில் ஊசி போட்டு என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இது போல் செய்ய இவருக்கு துணிச்சல் இருக்கும் என நான் நினைத்து கூட பார்த்ததில்லை. அவர் அவ்வாறு அத்துமீறும் போது நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இத்தனை முட்டாள்தனமாக இருந்து இருப்பதற்கு அந்த இடத்திலேயே நான் இறக்க வேண்டும் என நினைத்தேன் என அந்த பெண் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்டுடியோ
சுதீஷின் ஸ்டுடியோவில் இருந்த லேப்டாப்கள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இது போல் அவர் பாலியல் வன்கொடுமை செய்து அந்த பெண்களை மிரட்டி பணம் பறித்தாரா , வேறு எந்த மாதிரியான மோசடிகளில் ஈடுபட்டிருந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications