கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: அனுபவ் ரவி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி அனுபவ் ரவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "கோடநாடு வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது போல தோன்றுகிறது. அந்த வழக்கில் மேல் விசாரணை தேவை என புலனாய்வுத்துறை கோரும்பட்சத்தில் அதில் மனுதாரருக்கு என்ன பிரச்னை?" என்று கேள்வி எழுப்பியது.

இந்த விவகாரத்தில் புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தற்போதைக்கு தலையிட விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், அனுபவ் ரவியின் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஏற்கெனவே பல்வேறு சாட்சிகளிடம் விசாரித்து வழக்கு முடிக்கப்படும் தருவாயில் அதை மீண்டும் விசாரிக்க காவல்துறை விடுக்கும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொரடர்ந்திருந்தார். ஆனால், அதை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அனுபவ் ரவி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் ஊட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார். மேலும், கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கிலும் இவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.

ஆனால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க கடந்த ஏப்ரல் மாதம் அனுமதி வழங்கிய நீதிமன்றம், மற்றவர்களை விசாரிக்கக் கோரிய மனுவை ஏற்கவில்லை. இதனால் அதிமுகவைச் சேர்ந்த அனுபவ் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி போலீஸ் விசாரணைக்கு தடை கோரினார்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கோடநாடு வழக்கு மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளது.

கோடநாடு வழக்கு என்ன?

ஜெயலலிதா
Getty Images
ஜெயலலிதா

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கோடநாட்டில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இந்த வழக்கின் விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, கோடநாடு வழக்கை மறு விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்' என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதன்படி, கோடநாடு வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சயானிடம் நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத், குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ் உள்ளிட்டோர் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி சில தகவல்கள் வெளியாயின. தன்னை இந்த வழக்கில் சிக்க வைக்க சதி நடப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொதித்தார். காவல்துறையில் சயான் அளித்த வாக்குமூலங்கள் எதுவும் வெளிவராத நிலையில், அ.தி.மு.க தரப்பில் அரசுக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+