ரெட்லைட் ஏரியாவில் தீராத வெறி.. பெண் டாக்டரை சீரழித்து கொன்றது எப்படி? கொடூரன் பற்றிய திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாட்டையே அதிர வைத்துள்ள இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் பெண் டாக்டரை கொல்வதற்கு முன்பு சஞ்சய் ராய் மதுபானம் குடித்து ஆபாச படம் பார்த்ததும், 2 ரெட்லைட் ஏரியாக்களுக்கு சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் எப்படி மருத்துமனைக்கு நுழைந்து குற்றம் செய்தார் என்பது பற்றிய பதறவைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துமனை ஆசியாவிலேயே முதல் முதலாக 1886ம் ஆண்டில் தொடங்கப்பட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையை தொடங்கியவர் டாக்டர் ராதா கோபிண்டா கார் ஆவார். இவரது பெயரில் ஆர்ஜி கார் என்று இந்த மருத்துவமனை அழைக்கப்படுகிறது.

அதன்பிறகு 1958 ம் ஆண்டில் மேற்கு வங்க அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இங்கு இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவ படிப்பை படித்து வந்தவர் 31 வயது பெண். இவர் பயிற்சி டாக்டராகவும் பணியாற்றி வந்தார். கடந்த 8 ம் தேதி அவர் மருத்துவமனையில் பணி செய்தார்.

kolkata crime Mamata Banerjee

இரவு பணியை முடித்துவிட்டு அவர் மருத்துவமனையின் செமினார் ஹாலில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அதன்பிறகு காலையில் அங்கு சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெண் பயிற்சி டாக்டர் அரை நிர்வாணமாக இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த ஆடைகள் கிழிக்கப்பட்டு இருந்தது. உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தன.

பெண் டாக்டர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூறாய்வில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது கை, கால் எலும்புகள் முறிந்து இருந்ததும், கழுத்து நெரித்து அவர் கொலை செய்யப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது.

டாக்டர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். குற்றத்தில் ஈடுபட்டோருக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். பெண் டாக்டர் பலாத்கார கொலை என்பது கொடூரமானது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது சிபிஐ தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சஞ்சய் ராயிடம் முதற்கட்டமாக சிபிஐ விசாரணை நடத்தி முடித்துள்ளது. மேலும் அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்ற சிபிஐயின் கோரிக்கை நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் சஞ்சய் ராய்க்கு உண்மை கண்டறியும் சோதனை (Polygraph test) மேற்கொள்ளப்பட உள்ளது.

உண்மை கண்டறியும் சோதனைக்கு சஞ்சய் ராய் தரப்பில் வழக்கறிஞரின் அனுமதி வேண்டும். இந்த உண்மை கண்டறியும் சோதனை நேற்று நடத்தப்பட இருந்தது. ஆனால் வழக்கறிஞர் வரவில்லை. இதனால் இந்த சோதனை தள்ளிப்போய் உள்ளது. தற்போது சட்ட உதவி மையத்தில் இருந்து வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டு உண்மை கண்டறியும் சோதனை பற்றி சஞ்சய் ராயிடம் தெரிவிக்கப்பட உள்ளது. இந்த நடைமுறை முடிந்த பிறகு சஞ்சய் ராய் அனுமதியுடன் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த சோதனையின்போது முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

இத்தகைய சூழலில் தான் பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது பெண் டாக்டரை கொலை செய்வதற்கு முன்பு சஞ்சய் ராய் என்னென்ன செய்தார்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. சஞ்சய் ராய் அவர் பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொல்வதற்கு முன்பு மதுபானம் குடித்து 2 ரெட்லைட் ஏரியாக்களுக்கு (பாலியல் தொழில் நடக்கும் பகுதி) சென்று வந்துள்ளார். இது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 8 ம் தேதி இரவில் சஞ்சய் ராய் மதுபானம் குடித்து உல்லாசமாக இருக்க முடிவு செய்தார். இதற்காக அவர் ரெட்லைட் ஏரியாவுக்கு சென்றார். கொல்கத்தாவின் வடக்கு பகுதியில் சோனாகாச்சியில் உள்ள ரெட்லைட் ஏரியாவுக்கு சென்றார். அப்போது அவருடன் இன்னொரு நண்பரும் இருந்தார். அங்கு அவர்கள் மதுபானம் குடித்துள்ளனர். போதை அவர்களின் தலைக்கேறியுள்ளது. இதையடுத்து சஞ்சய் ராயின் நண்பர் விபசாரம் நடக்கும் வீட்டுக்குள் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். சஞ்சய் ராய் வீட்டுக்கு வெளியே நின்றுள்ளார்.

kolkata crime Mamata Banerjee

அதன்பிறகு நள்ளிரவு 2 மணிக்கு கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள செட்லா எனும் ரெட்லைட் ஏரியாவுக்கு சென்றுள்ளனர். அங்கும் அவரது நண்பர் உல்லாசமாக இருந்துள்ளார். சஞ்சய் ராய் பெண்ணை பார்த்து கேலி, கிண்டல் செய்துள்ளார். மேலும் ஒரு பெண்ணை அழைத்து அவரது நிர்வாண போட்டோக்களை கேட்டு சீண்டியுள்ளார். இதற்கிடையே வெளியே வந்த அவரது நண்பர் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.

அப்போது சஞ்சய் ராய் செல்ல மறுத்துள்ளார். இதையடுத்து சஞ்சய் ராயின் நண்பர் மட்டும் வாடகை பைக்கை எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். சஞ்சய் ராய் அங்கிருந்து ஆர்ஜி கார் மருத்துவமனைக்கு அதிகாலை 3.50 மணிக்கு சென்றார். மருத்துவமனை அருகே மீண்டும் மதுபானம் குடித்து அவர் ஆபாச படங்களை பார்த்துள்ளார். இதனால் போதை அவருக்கு அதிகரித்துள்ளது.

அதன்பிறகு மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்துள்ளார். மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரின் கதவை உடைத்துள்ளார். அதன்பிறகு அவசர சிகிச்சை பிரிவுக்கு அதிகாலை 4.03 மணிக்கு சென்றார். அங்கிருந்து 3வது மாடியில் உள்ள செமினார் ஹாலுக்கு சென்றார். அங்கு தான் பணியை முடித்த பெண் பயிற்சி டாக்டர் இருந்துள்ளார். அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளார்.

இந்த வேளையில் சஞ்சய் ராய் கொடூரனாக மாறியுள்ளார். அவரது உடலில் தூங்கிய மிருக குணம் எழுந்துள்ளது. பெண் டாக்டரை பார்த்த சஞ்சய் ராய் நேராக அவர் மீது பாய்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ந்துபோன பெண் டாக்டர் தூக்கத்தில் இருந்து எழுந்து அலறியுள்ளார். அப்போது வாயை பொத்திய சஞ்சய் ராய் அவரை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.

முன்னதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சஞ்சய் ராய்க்கும் அங்கு பணியாற்றும் டாக்டர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அட்மிட் செய்யும் விவகாரத்தில் இந்த தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் பெண் டாக்டரையும் திட்டியுள்ளார். அதன்பிறகு அவர் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவர் மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொன்று கொடூரனாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+