இது புதுசா இருக்கே.. கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதி அபிஜித் ராஜினாமா! பாஜகவில் இணைகிறாராம்
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் சவாலை ஏற்று கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்த அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைய உள்ளதாக பரபரப்பாக அறிவித்துள்ளார். மேலும் அவர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் அவரது அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக ஆசிரியர் நியமனத்தில் பெரியளவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் விசாரித்து வந்தார். வழக்கு விசாரணையின்போது மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்யும் முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசை கடுமையாக சாடினார்.
அவரது கருத்துகள் பெரியளவில் விவாதத்தை கிளப்பின. மேலும் இந்த வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பிறப்பித்தார். மேலும் அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு விசாரணையை பற்றி விபரங்களை தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது. மேலும் உச்சநீதிமன்றம் அபிஜித் கங்கோபாத்யாய் நடவடிக்கையை கண்டித்தது.
இது ஒருபுறம் இருக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நீதிபதி அபஜித் கங்கேபாத்யாயின் பெயரை குறிப்பிடாமல் அவரை விமர்சனம் செய்தனர். மேலும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்து எதிர்க்கலாம் என்ற வகையில் சவால் விடுத்து வந்தனர். இத்தகயை சூழலில் தான் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்பை அபிஜித் கங்கோபாத்யாய் இன்று ராஜினாமா செய்தார்.
இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் வழங்கினார். மேலும் ராஜினாமா கடிதத்தின் நகல்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ் சிவஞானம்ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். இன்னும் 3 மாதம் அவருக்கு பதவிக்காலம் இருக்கும் நிலையில் ராஜினாமா செய்தார். இதையடுத்து இன்று அபிஜித் கங்கோபாத்யாய் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பாஜக கட்சியில் சேர்ந்து அரசியலுக்குள் நுழைவதாக கூறியதோடு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
நான் பாஜகவில் சேர உள்ளேன். .அநேகமாக மார்ச் 7ம் தேதி பாஜகவில் இணைவேன். ஏனென்றால் திரிணாமுல் காங்கிரஸின் ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரே தேசியக் கட்சி பாஜக தான். ஆளும் கட்சியினரின் (மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்) சவால் மற்றும் கிண்டல் காரணமாக இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன். ஆளும் கட்சியினர் என்னை பலமுறை அவமதித்துள்ளனர். அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் கடும் வார்த்தைகளால் என்னை விமர்சித்துள்ளனர். உண்மையில் அவர்களின் கல்வியறிவில் சந்தேகம் எனக்கு இருக்கிறது'' என்றார்.
இந்த வேளையில் தங்கள் கட்சியில் இணையும்படி பாஜக அழைப்பு விடுத்ததா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, ‛‛7 நாட்களுக்கு முன்பு பாஜகவுடன் நான் பேசினேன். அநேகமாக மார்ச் 7 ம் தேதி பாஜகவில் இணைவேன். கட்சியில் இணைய காலதாமதம் செய்ய விரும்பவில்லை. மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட நிலை தான் உருவாகும். சில கைது நடவடிக்கைகள் எடுக்கும்போது கட்சி உடையும். திரிணாமுல் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி அல்ல. திரிணாமுல் யாத்ரா கட்சி... திரிணாமுல் ஒரு தவறு செய்யும் கும்பல் என்று நான் நினைக்கிறேன். திரிணாமுல் கட்சியை ஒரு அரசியல் கட்சியாக நான் கருதவில்லை'' என்றார்.
இந்த வேளையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛பாஜக வாய்ப்பளித்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். எனக்கு வாய்ப்பளிப்பது தொடர்பான முடிவு என்பது பாஜக தலைவர்களின் கையில் தான் உள்ளது'' என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications