வெளியில் சொன்ன சுட்டு கொன்றுவேன்... மாணவியை மிரட்டி சீரழித்த ஆசிரியர்
பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். வெளியில் சொன்னால் சுட்டு கொன்று விடுவேன் என்று மிரட்டியே அந்த சிறுமியை சீரழித்திருக்கிறா
கொல்கத்தா: டியூசன் படிக்க வந்த பத்தாம் வகுப்பு மாணவியை பல மாதங்களாக மிரட்டி பாலியல் பலாத்காரம் ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் சுட்டுக்கொன்று விடுவேன் என்று மிரட்டியே பல மாதங்களாக சீரழித்துள்ளான் அந்த கயவன். கொல்கத்தாவில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பத்தாம் வகுப்பு படிக்கும் மேகலாவிற்கு ( பெயர் மாற்றம்) அறிவியல் என்றாலே கசக்கும். கஷ்டமா இருக்கே என்று வீட்டில் சொல்லவே கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அறிவியல் பாடத்திற்காக ராஜீவ் சக்கரவர்த்தி என்ற ஆசிரியரிடம் டியூசனுக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில மாதங்களாகவே மகளின் உடல் நிலையிலும் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டதை பார்த்த பெற்றோர்கள் சந்தேகமடைந்தனர். டியூசன் படிக்க பிடிக்கலையோ என்று நினைத்து பேசாமல் இருந்தனர்.

எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, அடம் பிடிப்பது என மேகலாவிடம் பிரச்சினைகள் அதிகரித்தன. என்னவாக இருக்கும் என்று யோசித்த பெற்றோர்கள் மேகலாவிடம் பேச்சு கொடுத்தனர். வெடித்து கதறிய மேகலா தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியதைக் கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
டியூசன் படிக்கப் போன இடத்தில் அந்த கயவன் தொடக்கூடாத இடத்தில் தொட்டு பேசுவான், நாளாக நாளாக அவனது பாலியல் தொந்தரவு அதிகரித்தது. கடந்த சில மாதங்களாக அவனது பாலியல் இச்சைக்கு தன்னை முழுவதுமாக பயன்படுத்திக்கொண்டான் என்று பெற்றோரிடம் கூறினாள் மேகலா.
தான் செய்யும் காரியத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் சுட்டுக்கொன்று விடுவேன் என்று துப்பாக்கியை காட்டி மிரட்டியே காரியத்தை சாதித்ததாக கூறினாள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாதல் மனசுக்குள் புழுங்கிய மேகலா, மன அழுத்தத்திற்கு ஆளாகி யாரிடமும் பேசாமல் ஒதுங்கியதாக மகள் கூறியதைக் கேட்டு பெற்றோர்கள் ஆத்திரமடைந்தனர்.
மேகலா உடன் காவல் நிலையத்திற்கு சென்ற பெற்றோர்கள், டியூசன் ஆசிரியர் சக்ரவர்த்தி மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் டியூசன் ஆசிரியரை கைது செய்து போஸ்கோ சட்டம், சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். நீதிபதியின் முன்பாக ஆஜர்படுத்திய போலீசார் எட்டு நாட்கள் போலீஸ் கஷ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications