குமட்டும் ஆபாசம்.. இயற்கைக்கு மாறான உறவு.. கொல்கத்தா டாக்டரை கொன்றவரின் செல்போனை கண்டு அலறிய போலீஸ்
கொல்கத்தா: கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ கையில் எடுத்துள்ளது.. இதுகுறித்த தீவிர விசாரணையையும் இன்று முதல் துவக்கி உள்ளது.. இதனிடையே, பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளி குறித்து பகீர் தகவல்கள் பல வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது.
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் 2ம் ஆண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்த பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், "பெண் டாக்டரின் கண்கள், வாயிலிருந்து ரத்தம் கசிந்திருந்தது.. முகத்தில் காயங்கள் மற்றும் ஒரு நகத்தில் காயம் இருந்தது. உதடு, வயிறு, இடது கால், கழுத்து, வலது கை, மோதிர விரல் ஆகியவற்றிலும் காயங்கள் உள்ளன. கழுத்து எலும்பும் உடைந்துள்ளது. அந்தரங்க பாகங்களில் ரத்தம் கொட்டியிருக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
அதிரடி கைது: அதுமட்டுமல்ல, கொலை செய்யப்பட்டு பிறகும்கூட, அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருந்த தகவல், ஒட்டுமொத்த பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.. இதையடுத்து, செமினார் ரூமில் விழுந்த கிடந்த ப்ளூடூத் ஹெட்போன், சிசிடிவி கேமரா என ஆதாரங்களின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். செமினார் ஹாலில் 40 நிமிடங்கள் இருந்துள்ளார் இந்த சஞ்சய் ராய்..
பலாத்காரம் செய்து, டாக்டரை கொன்றுவிட்டு எங்கியும் தப்பி ஓடவில்லை.. எந்த பதட்டமும் இல்லாமல், தன்னுடைய டிரஸ்ஸில் இருந்த ரத்த கறைகளை சோப்பு போட்டு துவைத்திருக்கிறார். பிறகு பக்கத்திலுள்ள போலீஸ் பூத்திற்கு சென்று நன்றாக தூங்கியிருக்கிறார். ஆனால், ஷூவில் ஒட்டியிருந்த ரத்தத்தை கவனிக்காமல் விட்டுள்ளார். இதுதான் போலீசார் கண்ணில் சிக்கிவிட்டது. சஞ்சாய் ராயிடம் தொடர் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
சீனியர் அதிகாரி: இதனிடையே, குற்றவாளி சஞ்சய் ராய் குறித்து புதிய தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சஞ்சய் ராய்க்கு பல வருடங்களாகவே சீனியர் போலீஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய நட்பு வட்டாரம் இருந்துள்ளது.. அதனால்தான், கொல்கத்தாவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தன்னார்வலராக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது..
33 வயதான சஞ்சய் ராய், அலிபூரை சேர்ந்தவர்.. கடந்த 2019-ல் தன்னார்வலராக பணிக்கு சேர்ந்திருக்கிறார். இதுபோன்ற ஒப்பந்தப் பணியாளர்கள், குடிமைத் தன்னார்வத்தொண்டர்கள், போக்குவரத்து மேலாண்மை மற்றும் பேரிடர் போன்ற சமயங்களில், காவலர்களுக்கு உதவுவதற்காக பணியமர்த்தப்படுவார்கள்.. இவர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
டி-ஷர்ட்: அதனால்தான், தன்னார்வத் தொண்டராக பணியாற்றியதால், மருத்துவமனையின் பல துறைகளுக்கு எளிதில் வந்து செல்பவராக இருந்திருக்கிறார்.. எங்கே, யாரை சந்தித்தாலும் தன்னை கொல்கத்தா போலீஸ்காரர் என்றுதான் அறிமுகப்படுத்தி கொள்வாராம் சஞ்சய்.. KB (கொல்கத்தா போலீஸ்) என்று எழுதப்பட்ட டி-ஷர்ட்டைத்தான் எப்போதும் அணிந்து கொண்டு சுற்றுவாராம்.. அவரது பைக்கிலும் KB டேக் ஒட்டி வைத்திருக்கிறார்..
பல சமயம், போலீஸ் ஸ்டேஷனிலேயே தங்கிவிடுவாராம்.. பல போலீஸ்காரர்களை கூட, ஒருமையில் அழைக்கும் அளவுக்கு நெருக்கம் வைத்திருக்கிறாராம்.
மோசடி பணம்: மருத்துவமனை நோயாளிகளின் உறவினர்களிடம் பணம் வசூலிக்கும் மோசடியில் ராய் ஈடுபட்டு வந்ததாகவும் சொல்கிறார்கள்.. இவர்களிடம் பணம் வசூல் ஆகாவிட்டால், அருகிலுள்ள முதியோர் இல்லங்களுக்கு சென்று, அவர்களிடம் பணம் வசூலிப்பாராம்.
4 பெண்களை திருமணம் செய்துள்ளார்.. முதல் மனைவி பெஹாலாவை சேர்ந்தவர்.. இரண்டாவது மனைவி பார்க் சர்க்கஸ்.. மூன்றாவது மனைவி பாரக்பூரை சேர்ந்தவர்.. 4வதாக பெட்ரோல் பங்கில் வேலை செய்த பெண் கல்யாணம் செய்துள்ளார்..
டார்ச்சர்: திருமணம் செய்து கொண்ட சில நாட்களிடையே, சஞ்சய் ராயின் விஸ்வரூபம் 4வது மனைவிக்கு தெரியவந்தது. உடல்ரீதியாக துன்புறுத்தல் செய்யவும், நேராக போலீசுக்கு போய்விட்டார் 4வது மனைவி.. சஞ்சய் ராய், தன்னை பாலியல் டார்ச்சர் செய்வதாக கூறி, குடும்ப வன்முறைத்தொடர்பாக அந்த பெண் புகார் தந்தார்..
4வது மனைவி போலவே, மற்ற மனைவிகளையும், உடல் ரீதியாக இப்படித்தான் துன்புறுத்தி வந்தாராம் சஞ்சய் ராய்.. இது தொடர்பாக மனைவிகளுடன் எந்நேரமும் தகராறு செய்து கொண்டேயிருப்பாராம் சஞ்சய் ராய்.. இவர்கள் வீட்டில் எந்நேரேமும் சண்டையும், சச்சரவுமாக இருக்கும் என்கிறார்கள் அக்கம்பக்கத்து வீட்டினர். நாளுக்கு நாள் பாலியல் டார்ச்சர் தாங்காமல், சஞ்சய் ராயைவிட்டு, அந்த மனைவிகள் பிரிந்து சென்றுவிட்டார்களாம்.
வீடியோக்கள் அதுமட்டுமல்ல, தற்போது கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயின் செல்போனை போலீசார் ஆய்வு செய்திருக்கிறார்கள்.. அப்போது செல்போனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வீடியோக்களை கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார்களாம். ஆபாச படங்களுக்கு அடிமையானவராக இருந்திருக்கிறார்.. அதிலும், இயற்கைக்கு மாறான பாலியல் உறவு சார்ந்த வீடியோக்களே அதிகமாக செல்போனில் வைத்திருந்தாராம் சஞ்சய் ராய்.
மூத்த போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்லாமல், பல்வேறு மருத்துவமனை அதிகாரிகளுடன் நல்ல நெருக்கம் சஞ்சய் ராய்க்கு இருந்து வந்துள்ளது.. அனைத்து துறைகளிலும், நிறைய அதிகாரிகளுடன் நெருங்கி பழகியிருக்கிறார் சஞ்சய் ராய். இந்த நெருக்கம்தான், அனைத்து துறைகளிலும் தவறுகள் செய்ய தடையின்றி அணுக வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது..
செல்வாக்கு: எத்தனை தவறுகள் செய்தாலும், அதை யாருமே தட்டிக்கேட்க மாட்டார்கள், அப்படியே தட்டிக்கேட்டாலும், தனக்கிருக்கும் செல்வாக்கை வைத்து தப்பித்து விடலாம் என்பதே சஞ்சய் ராயின் எண்ணமாக இருந்து வந்துள்ளது. பாலியல் வன்கொடுமையின்போது, சஞ்சய் ராயின் பிடியிலிருந்து தப்பிக்க, பெண் டாக்டர் நிறையவே போராடியிருக்கிறார். ஆனால், சஞ்சய் ராய் குத்துச்சண்டையில் திறம் பெற்றவராம்.. அதனால், பெண் டாக்டரை கடுமையாக தாக்கியிருக்கிறார்.
சலனம் இல்லை: இவ்வளவு கொடூரத்தை செய்துள்ள சஞ்சய் ராய், தற்போது தன்னுடைய குற்றத்தை பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டுவிட்டார்.. அவரது முகத்தில் எந்தவிதமான வருத்தமும், பதற்றமும் இல்லையாம்.. "நீங்க ஆசைப்பட்டால் என்னை தூக்கில் கூட போடுங்கள்" என்று சலனமேயில்லாமல் சொல்கிறாராம்...!!!
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications