ஆகஸ்ட் 9 முதல் இன்று வரை.. கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்காரம் கொலையில் என்ன நடந்தது? டைம்லைன்
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது நிரம்பிய பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் சம்பவம் குறித்த முழு டைம்லைன் வருமாறு:
ஆகஸ்ட் 9: கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிகாலையில் 31 வயது நிரம்பிய பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மருத்துவமனையில் உள்ள செமினார் ஹாலில் கிடந்தது.

ஆகஸ்ட் 10: வழக்கு தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதோடு பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொன்றவர்கள் மீது உடனடி நடவடிக்கை கோரி இந்திய மருத்துவர்கள் சங்க டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆகஸ்ட் 11: ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடுக்கு காரணம் எனக்கூறி அதன் சூப்பிரண்டு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 12: ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் பொறுப்பில் இருந்து சந்தீப் கோஷ் மாற்றம் செய்யப்பட்டார். Federation of Resident Doctors Association (FORDA) சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆகஸ்ட் 13: பெண் டாக்டர் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்து உடனே தண்டனை வழங்க வேண்டும்.நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதனால் நாடு முழுவதும் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்த வேளையில் பெண் டாக்டர் பலாத்கார கொலை என்பது மிகவும் கொடூரமானது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வரை விடுப்பில் செல்ல உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரைணையை சிபிஐ வசம் ஒப்படைத்து அதிரடியாக உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 14: பெண் டாக்டர் பலாத்கார கொலையில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க தொடங்கியது.
ஆகஸ்ட் 15: கொல்கத்தா ஆர்ஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் நுழைந்து ஒரு கும்பல் சூறையாடியது. இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆகஸ்ட் 17 ம் தேதி 24 மணிநேரம் நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 17: நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். பெண் டாக்டர் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். டாக்டர்கள், நர்ஸ்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினர். பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் அசோகன் கடிதம் எழுதினார். பெண் டாக்டர் பலாத்கார கொலைக்கு பாதுகாப்பு குறைபாடு தான் காரணம் என்று தேசிய மகளிர் ஆணையம் குற்றம்சாட்டியது.

ஆகஸ்ட் 20: பெண் டாக்டர் பலாத்கார கொலையை தாமாக முன்வந்து இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பான நிலைமை இல்லாதது ஆழ்ந்த கவலை அளிக்கிறது.மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும். கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கின் விசாரணை நிலையை அறிக்கையாக சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். வரும் வியாழக்கிழமைக்குள் முழு அறிக்கையையும் தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications