Kolkata doctor case: கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்கார வழக்கு! குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் சிறை!
கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை என சீல்டா மாவட்ட அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன் ரூ 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் ராயின் தாய்க் கூட தனது மகனுக்கு தூக்கு தண்டனை விதித்தாலும் பரவாயில்லை என கூறி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்த நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக ரூ 17 லட்சம் வழங்குமாறு மேற்கு வங்க அரசுக்கு கோர்ட் உத்தரவிட்ட போது அதற்கு பெண்ணின் பெற்றோர் மறுத்தனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். அவரது உடலில் 25 இடங்களில் காயங்கள் இருந்தன.
கழுத்து நெரிக்கப்பட்டதால் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குற்றவாளியை கைது செய்யக் கோரி மேற்கு வங்கம் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். கையெழுத்து இயக்கம் நடத்தினர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் விசாரணை தொடங்கி 57 நாட்கள் முடிவடைந்த நிலையில் ஜனவரி 18-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரும் நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தனர்.
நீதிபதி அனிர்பன் தாஸ் தனது தீர்ப்பை வாசித்தார். அதில் சிபிஐ முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி. அவருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனையும் குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்படலாம் என தெரிவித்திருந்தார்.
அப்போது அங்கிருந்த சஞ்சய் ராய், "நான் இதை செய்யவில்லை, இதை செய்தவர்களை ஏன் கைது செய்யவில்லை" என கேட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐயோ வழக்கில் ஒரே குற்றவாளிதான் என கூறி வருகிறது.
இந்த நிலையில் சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரங்கள் இன்று பகல் 2.45 மணிக்கு அறிவிக்கப்பட்டன. அப்போது அவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ரூ 50 ஆயிரம் அபராதமும் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்திற்கு ரூ 17 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயினும் ரூ 17 லட்சம் அபராதத்தை வாங்க மருத்துவ மாணவியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications