கேரளாவை உலுக்கிய 6 கொலை 'சயனைடு' ஜோலி.. கோழிக்கோடு சிறையில் தற்கொலை முயற்சி

Subscribe to Oneindia Tamil

கோழிக்கோடு: கேரளாவையே அதிரவைத்த, சயனைடு மூலம் 6 கொலைகளை செய்த ஜோலி, கோழிக்கோடு சிறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    செய்தி தெரியுமா | 27-02-2020 | Oneindia tamil Morning news

    கேரளாவில் 17 ஆண்டுகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த 6 மரணங்களுக்கான புதிரை கடந்த ஆண்டுதான் போலீசார் கண்டறிந்தனர். கோழிக்கோடு அருகே கூடத்தாய் என்ற இடத்தில்தான் இத்தனை கொலைகளும் அடுத்தடுத்து அரங்கேற்றப்பட்டன.

    Koodathayi serial murder accused Jolly attempts suicide

    இந்த கொலைகளை செய்தது ஜோலி என்ற பெண்தான் என தெரியவந்தது. கணவர், மாமனார், மாமியார் என சகட்டுமேனி குடும்ப உறவுகள் 6 பேரை சயனைடு மூலம் ஜோலி படுகொலை செய்தது அம்பலமானது.

    மேலும் சிலரையும் ஜோலி கொல்ல சதித் திட்டம் தீட்டியிருந்ததும் அம்பலமானது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஜோலி, கோழிக்கோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜோலி இன்று காலை சிறையில் மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

    சிறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோலியை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+