தித்திக்கும் ‘பலா’... திகட்டாத உணவுகள்... கேரளாவில் நடந்த ‘பலாப்பழ திருவிழா’!
திருவனந்தபுரம்: கேரளாவில் ‘குடும்பஸ்ரீ' அமைப்பின் சார்பில் பலாப்பழ திருவிழா நடைபெற்றது. இதில், பலாப் பழத்தினால் செய்யப்பட்ட விதவிதமான உணவுகள் பரிமாறப்பட்டன.
கேரள மாநிலத்தில் ‘குடும்பஸ்ரீ' என்ற பெண்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் ஏராளமான பெண்கள் உறுப்பினர்களாக இணைந்து செயலாற்றி வருகிறார்கள். பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பெண்கள் தன்னம்பிக்கையுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் இந்த அமைப்பு உதவி செய்து வருகிறது.

"குடும்பஸ்ரீ' என்பதற்கு குடும்பத்தில் செல்வம் பெருகுவது என்று பொருளாகும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களை அதிகாரம் பெறச் செய்யும் நோக்கத்துடன் 1998-ம் ஆண்டு கேரள அரசு இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்தது.
இந்நிலையில், இந்தக் குடும்பஸ்ரீ அமைப்பு பலாப்பழங்களைக் கொண்டு விதவிதமாக உணவுப் பொருட்களை தயாரித்து ‘பலாப் பழ திருவிழா' ஒன்றை நடத்தியது.
இதில், ஏராளமான பெண்கள், பலாப்பழத்தைக் கொண்டு சிப்ஸ், ஜூஸ் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களைச் சமைத்து அசத்தினர். பலாப்பழத்தின் தேவை மற்றும் சுவையை மேலும் அதிகரிப்பதற்காக இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒரே இடத்தில் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் தயாரிக்கப் பட்ட பல உணவுப் பொருட்கள் கிடைத்ததால், மக்கள் ஆர்வமுடன் இதில் பங்கேற்று, உணவுப் பொருட்களை ருசித்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications