நிலக்கரி வழக்கில் எப்.ஐ.ஆர்.. கவலை இல்லை: ப.சிதம்பரத்தை சந்தித்த குமார்மங்கலம் பிர்லா பேட்டி

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை முறைகேடாக பெற்றதாக குமாரமங்கலம் பிர்லா மீது சிபிஐ அண்மையில் வழக்குப் பதிவு செய்தது. அவர் மட்டுமின்றி அவரது ஹிண்டால்கோ நிறுவனம், நிலக்கரி துறை முன்னாள் செயலர் பிரகாஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஹிண்டால்கோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று மாலை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை குமார்மங்கலம் பிர்லா சந்தித்துப் பேசினார். தம் மீதான வழக்கு குறித்தே குமார் மங்கலம் பிர்லா சிதம்பரத்துடன் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமார் மங்கலம் பிர்லா, நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். என் மீது சிபிஐ எப்.ஐ.ஆர். போட்டிருப்பது குறித்து கவலைப்படவில்லை என்றார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டில் சிக்கிய தொழிலதிபர், நிதி அமைச்சரை சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications