திருப்பதியிலேயே லட்டு இல்லையா?
அமராவதி: திருப்பதியில் லட்டு பிரசாத விநியோகம் சில மணிநேரம் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லட்டு என்றால் நமக்கு நினைக்கு வருவது திருப்பதி தான். அவ்வாறு இருக்கையில், திருப்பதியில் எழுமலையானை தரிசனம் செய்துவிட்டு லட்டு வாங்கிவிட்டு வரும் பக்தர்கள் ஏராளம். இந்நிலையில் திருமலையில் நேற்று காலை திடீரென லட்டு தட்டுப்பாடு நிலவியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சில மணி நேரம் விநியோகம் நிறுத்தப்பட்டதால், லட்டு பிரசாதம் வாங்க வரிசையில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் ஆத்திரமடைந்தனர். மேலும் லட்டு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே அங்கு கள்ளத் தனமாக லட்டு விற்பனை செய்யப்படுகிறதாகவும், புரோக்கர்கள் சிலர் அதிக விலைக்கு லட்டு விற்பதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டினர். அப்போது, தேவஸ்தானத்திற்கு வந்த அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டியிடம், இந்த சம்பவம் தொடர்பாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, உடனடியாக லட்டு விநியோக மையத்திற்கு சென்ற அவர், அங்கு விசாரணை நடத்தியுள்ளார். இதன் பின்னரே லட்டு வழக்கம் போல விநியோகிப்பட்டது. திடீரென சில மணி நேரம் லட்டு விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications