விஜயா ரெட்டியை காப்பாற்ற போய் கருகி டிரைவர் மரணம்.. மனைவி 8 மாத கர்ப்பிணியாம்!
தாசில்தாரை காப்பாற்ற சென்ற டிரைவரும் உடல் கருகி உயிரிழந்தார்
Recommended Video
அப்துல்லாபூர்மெட், ரங்காரெட்டி, தெலங்கானா: தீயில் கருகிய தாசில்தார் விஜயாவை காப்பாற்ற போன டிரைவர் குருநாத்தும் இப்போது உயிரிழந்துள்ளார்.. இவரது மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், குருநாத்தின் மரணம் தெலங்கானா மக்களை புரட்டி போட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மெட் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பெண் தாசில்தார் விஜயா ரெட்டி என்பவரை உயிரோடு தீவைத்து எரித்து விட்டார் சுரேஷ் என்ற விவசாயி. நில ஆவணத்தில் தவறு இருந்ததாகவும், அதை சரி செய்யாமல் தாலுகா அலுவலகம் தாமதம் செய்ததாகவும், அதனால்தான் சுரேஷ் கோபத்தில் விஜயாவை தீ வைத்து கொளுத்தி கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.
அறைக்குள் பேசிக் கொண்டிருந்த சுரேஷ், திடீரென பெட்ரோலை விஜயா மீது ஊற்றவும், உடலில் நெருப்பு பற்றிக் கொண்டு வெளியே ஓடிவந்தார் விஜயா. அங்கிருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
"என்னை காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. நான்தான் விஜயா.." என்று கதறி உள்ளார். அப்போதுதான் பியூன் சந்திரையன், டிரைவர் குருநாதம் இருவரும் ஓடிச்சென்று விஜயாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அங்கேயே கரிக்கட்டையாக விழுந்து இறந்துவிட்டார் விஜயா. காப்பாற்ற சென்ற இருவருக்கும் தீக்காயம் பலமாக ஏற்பட்டது.
அதிலும் டிரைவர் குருநாத்துக்கு 80 சதவிகித தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. ஆஸ்பத்திரியில் தீவிரமாக சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாத நிலையில், இன்று அவரும் உயிரிழந்தார். குருநாத்துக்கு 27 வயதாகிறது.. ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், இவரது மனைவி இப்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
தாசில்தார் உயிரைக் காப்பாற்றப் போய் தனது உயிரை தியாகம் செய்துள்ளார் குருநாதம். அவரது கர்ப்பிணி மனைவியின் நிலையை நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள் ரங்காரெட்டி மாவட்ட மக்கள்! இதற்கிடையே, இவ்வவளவு மோசமான செயலில் ஈடுபட்ட சுரேஷும் தற்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு 60 சதவீத அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications