அரண்மனை முதல் அன்னாசி வரை... கலக்குது பெங்களூர் மலர் கண்காட்சி
பெங்களூர்: லால்பாக்கில் சுதந்திர தினம், குடியரசு தினங்களையொட்டி, ஆண்டுக்கு இருமுறை மலர் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். சுதந்திரதினத்தையொட்டி நேற்று தொடங்கியுள்ள மலர் கண்காட்சி, இம்மாதம் 16ம்தேதிவரை நடக்கிறது. இந்த கண்காட்சியில் கண்ணை கவரும் மலர்கள் பல்வேறு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. இதை காண பெங்களூர் மட்டுமின்றி, ஒசூர், சேலம் என சுற்றுவட்டார தமிழக பகுதிகளில் இருந்தும் லால்பாக் நோக்கி மக்கள் அணிவகுக்கிறார்கள்.

அம்மாடி... அன்னாசி
அன்னாசி பழத்தை கடையில பார்த்திருப்பீங்க.. டி.வி.யில பார்த்திருப்பீங்க, பீச்சில பீஸ்.. பீசா வெட்டி வச்சி பார்த்திருப்பீங்க. ஏன்.. உங்க வீட்டு ஃபிரிட்ஜில கூட பார்த்திருப்பீங்க. ஆனா, கம்பீரமா கட்-அவுட் சைசில் பார்த்திருப்பீங்களா..? பார்க்கலியா. சரி அப்போ இந்த பூ-பழத்தை பார்க்க லால்பாக் வாங்க.

மலர் மலை
மேற்கு தொடர்ச்சி மலை, இமயம் என மலைகள் பல வகை உண்டு. ஆனால் மலரால் ஆன குட்டி மலையை பார்க்க வேண்டுமா இங்கு வாருங்கள். பல ஜாதி மலர்களால் உருவாக்கப்பட்ட பூ மலை இது.

தேவி வருகிறாள்
மைசூர் தசராவின்போது யானை மீது அமர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மன் அம்பாரி ஊர்வலம் வரும் காட்சியை தசராவுக்கு முன்பே லால்பாக்கில் கண்முன் கொண்டு வந்துள்ளனர். வாசம் மிகு மலர்களின் பிரியையான அம்பாளுக்கு, மலர்களினாலே திருக்காணிக்கை செலுத்தியுள்ளனர் பூ வேலைப்பாடு கலைஞர்கள்.

மத யானை இல்லை... மலர் யானை
வெள்ளை யானை போகுது பாருன்னு யாராவது சொன்னா, அவரை ஒருமாதிரியா ஏற இறங்க பார்ப்போம். ஆனால் லால்பாக் போயிட்டு வந்து நான் சிகப்பு கலர் யானையை பார்த்தேனே.... என்று கூறினால் நம்பித்தாங்க ஆகனும். ஏன்னா, மைசூர் தசரா யானை அம்பாரி காட்சியை தத்ரூபமாக மலர்களில் வடிவமைத்துள்ளனர் கலைஞர்கள். அவர்களுக்கு கண்டிப்பாக ஒரு சபாஷ் போட்டே ஆகனும்.

பார்த்து சார்.. பத்திரம்
லால்பாக்கில் நேற்று மலர் கண்காட்சியை துவக்கி வைத்துவிட்டு பூக்களை ரசித்து பார்த்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. யானையின் தந்தம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்ததால், "பாத்து சார்.. பத்திரம் தள்ளி வாங்க.. குத்திடப்போகுது" என பக்கத்தில் இருந்த பெங்களூர் நகர மேயர் சத்யநாராயணா, முதல்வரை பார்த்து சொல்ல, அங்கு கலகலப்பு ஏற்பட்டது.

3 லட்சம் ரோஜா
மைசூர் அரண்மனையை பார்க்க 150 கி.மீ தூரத்திலுள்ள மைசூருக்கு ஏன் போக வேண்டும், பெங்களூரிலேயே பார்க்கலாமே. 3 லட்சம் ரோஜாக்களால் உருவாக்கப்பட்டுள்ள மைசூர் ராஜா அரண்மனையின் கம்பீர தோற்றம். 25 பேர் கொண்ட குழுவினர், ஒரு மாதகாலம் கஷ்டப்பட்டு இந்த அரண்மனையை கட்டி முடித்துள்ளனராம்.

கட்டணம் எவ்வளவு?
மலர் கண்காட்சியை காண வருவோரிடம் சாதாரண நாட்களில் ரூ.40ம், விடுமுறை நாட்களில் ரூ.50ம் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த கட்டணம் லால்பாக் பராமரிப்புக்கு பயன்படுத்தப்படும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications