தேசிய பெண்கள் ஆணையத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவின் லலிதா குமாரங்கலம் நியமனம்!
டெல்லி: தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் லலிதா குமாரமங்கலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளரான லலிதா குமாரங்கலம், தமிழகத்தைச் சேர்ந்தவர். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சகோதரி.

பாஜகவின் வேட்பாளராக தமிழகத்தில் 2004,2009 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். பாஜகவின் தேசிய செயலராக இருந்த அவர் தற்போது பாஜகவின் செய்தித் தொடர்பாளராக உள்ளார்.
இந்த நிலையில் தேசிய பெண்கள் ஆணையத்தின் புதிய தலைவராக லலிதா குமாரமங்கலம் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக இருந்த மமதா சர்மாவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 1-ந் தேதியுடன் முடிவடைந்தது.
அதன் பின்னர் தற்காலிக தலைவராக ஆணையத்தின் உறுப்பினர் பிரபாவல்கர் தற்காலிக தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் அறிவிக்கப்பட்ட 3 நாட்களிலேயே நீக்கப்பட்டு மத்திய அரசு செயலர் வி.எஸ். ஓபெராய் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications