ராஜ்யசபா தேர்தலில் நிதிஷ் குமார் கட்சி வேட்பாளர்களுக்கு பரம எதிரி லாலு பிரசாத் ஆதரவு
பாட்னா: பீகாரில் வரும் 19ம் தேதி நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.
வரும் 19ம் தேதி பீகாரில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சியின் சார்பில் பவன் வர்மா மற்றும் குலாம் ரசூல் பால்யவி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அவர்களை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சைகளான ரியல் எஸ்டேட் அதிபர் அனில் சர்மா மற்றும் சபிர் அலி ஆகியோருக்கு ஐக்கிய ஜனதாதளம் மீது அதிருப்தி கொண்டவர்களும், பாஜகவும் ஆதரவு அளித்துள்ளன.

இந்நிலையில் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு தனது பரம எதிரியான ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு போன் செய்து பேசினார் நிதிஷ்.
இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த லாலு, நிதிஷ் குமார் கட்சி வேட்பாளர்களை ராஷ்ட்ரிய ஜனதாதளம் ஆதரிக்கும் என்று அறிவித்துள்ளார். முன்னதாக லோக்சபா தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் படுதோல்வி அடைந்ததை அடுத்து நிதிஷ் குமார் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications