''அரே 007, இதர் தேக்கோ... மெய்ன்ஹூ டீச்சிங் கர்தாஹே நா''... சிறையில் பாடம் நடத்தும் லாலு!

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட லாலு அதே லொள்ளுடன்தான் இருக்கிறாராம். சிறைக்குள் கைதிகளுக்கு அரசியல் அறிவியல், நிர்வாகவியல் குறித்து பாடமும் எடுத்து பிரளயப்படுத்துகிறாராம்...

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் லாலு. இதையடுத்து அவரை சிறையில் போட்டு வைத்துள்ளனர்.

அங்கு தற்போது கைதிகளுக்கு கலகலப்பை ஏற்படுத்தி வருகிறார் லாலு. தனது பாணியில், படு கூலாக, கைதிகளுக்கு அரசியல் என்றால் என்ன, நிர்வாகம் என்றால் என்ன என்று பாடம்வேறு எடுக்கிறாராம்.

பிர்ஸா முண்டா சிறை

பிர்ஸா முண்டா சிறை

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் லாலு பிரசாத் யாதவ்.

வாத்தியார் வேலை

வாத்தியார் வேலை

தண்டனைக் கைதிகளுக்கு ஏதாவது ஒரு வேலை கொடுப்பார்கள். அதற்கு சம்பளமும் தருவார்கள். அந்த வகையில், லாலுவுக்கு ஆசிரியர் வேலை கொடுக்கப்பட்டுள்ளதாம். அதாவது அவரே இந்த வேலையை தேர்ந்தெடுத்தாராம். இதற்கு அவருக்கு தினசரி 25 ரூபாய் சம்பளமாம்.

வயசாச்சுல்லே.. அதான் வாத்தியார் வேலை

வயசாச்சுல்லே.. அதான் வாத்தியார் வேலை

இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளர் வீரேந்திர குமார் சிங் கூறுகையில் வயது மற்றும் அரசியல் அந்தஸ்து, உடல் நலம் ஆகியவற்றைப் பார்க்கும்போது லாலுவுக்கு கடுமையான வேலை தர முடியாது. எனவே கைதிகளுக்குப் பாடம் நடத்துமாறு அவரை கேட்டுக் கொண்டேன். அவரும் அரசியல் அறிவியல், நிர்வாகவியல் குறித்துப் பாடம் எடுப்பதாக கூறியுள்ளார். எப்படி பாடம் நடத்தப் போகிறாரோ.. ஆர்வமாக இருக்கிறோம் என்றார்.

பட்டதாரி பாஸ்...

பட்டதாரி பாஸ்...

லாலு அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாகவியல் குறித்துப் பாடமும் நடத்தியுள்ளார். அகமதாபாத் ஐஐடியிலும் போய் உரை நிகழ்த்தியுள்ளார்.. ரயில்வே அமைச்சராக இருந்தபோது.

வேறு வேலையும் காத்திருக்கிறது

வேறு வேலையும் காத்திருக்கிறது

இதுதவிர வேறு வேலை ஒன்றும் லாலுவுக்கு விரைவில் தரப்படுமாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+