நிலம் கையக்கப்படும் மசோதாவை நிறைவேற்றினால் போராட்டம் வெடிக்கும்
டெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றினால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்றும் அவர் ஆவேசம் பொங்க தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலை உலுக்கிக் கொண்டு இருக்கும் பிரச்னையான மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து, இந்திய நாடாளுமன்றம் நியமித்துள்ள நாடாளுமன்றக் கூட்டுக்குழுவினரால் பொதுமக்கள் கருத்து அறியும் கூட்டம் நேற்று 23.7.2015 டெல்லியில் மேற்கு வங்க மாநில அரசு அரங்கத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,
"உழவினார் கைம்மடங்கின் இல்லை விளைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை"
உழவர் உழாது கையை மடக்கி இருப்பார்களானால், விரும்பப்படும் உணவும் துறந்தோம் என்பார்க்குத் துறவு நிலையும் இல்லையாகும். இந்த உன்னதமான கருத்தைத் திருக்குறளில் சொன்னவர் திருவள்ளுவர்.
நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். உதட்டு அளவில் அல்ல, விவசாய வேலைகள் அனைத்தையும் செய்யத் தெரிந்தவன். துயரத்தில் நொறுங்கிக் கிடக்கும் விவசாயிகளின் நிலையை நேரில் அறிந்தவன். அவர்களின் பிரதிநிதியாகத்தான் இங்கு வந்து பேசுகிறேன்.

அக்கறையில்லையா?
கோடானு கோடி மக்களின் பிரச்னையைப் பற்றி ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சார்பில் இந்த 30 எம்.பி.க்கள் இந்தக் குழுவிற்குத் தேர்ந்து எடுக்கப்பட்டனர். ஆனால் அவர்களுள் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே இங்கே வந்து இருக்கின்றார்கள். இது மிகவும் வருந்தத்தக்கது. நாடாளுமன்ற அலுவல்களைக் காரணம் காட்டிச் சமாதானம் கூற முடியாது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற அக்கறை அவர்களுக்கு இல்லை. ஆனால் இந்தியா முழுமையும் உள்ள மக்களும் ஏடுகளும் இந்தக் குழுவின் அறிக்கையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஜனநாயக விரோதம்
முந்தைய காங்கிரஸ் அரசு முன்வைத்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முனைந்துள்ளது. இதற்காகக் குடியரசுத் தலைவரின் அவசரச் சட்டம் 3 முறை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, மீண்டும் அவசரச் சட்டப் பிரகடனம் செய்து இருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும்.

விவசாயிகள் போராட்டம்
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து, நாடெங்கும் கோடிக்கணக்கான விவசாயிகள் போராடுகிறார்கள். காவிரிப் படுகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு குஜராத்தைச் சேர்ந்த கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த மத்திய அரசு, ஒஎன்ஜிசியை அனுமதித்துள்ளது.

அனுமதிக்க மாட்டோம்
ஒஎன்ஜிசி பணிகளை மேற்கொண்டால் விவசாய நிலத்தின் அடிப்பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டு கடல் நீர் புகுந்து விடும். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு மக்கள் வறுமைக்கு ஆளாவார்கள்.

போராட்டம் வெடிக்கும்
இந்த மசோதாவை பயன்படுத்தி நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, பெரு நிறுவனங்களுக்கு வழங்குவதுதான் அரசின் திட்டமாகவுள்ளது. இதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். நில மசோதா நிறைவேற்றப்பட்டால் மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடிக்கும்.

குப்பைத் தொட்டியில் வீசுங்கள்
மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதில் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை இந்த அரசு நிறைவேற்றுமானால், அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் வெடிக்கும். கோடானுகோடி விவசாயிகளை நாங்கள் திரட்டுவோம். திட்டமிடப்பட்டுள்ள மசோதாவில் ஓரிரு மாற்றங்களைச் செய்வோம் என்பதையும் ஏற்க மாட்டோம். ஒட்டுமொத்தமாக இந்த மசோதாவைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று ஆவேசமாக பேசி முடித்தார் வைகோ.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications