இமாச்சலில் மீண்டும் நிலச்சரிவு.. சீட்டுக்கட்டு போல் சரியும் வீடுகள்.. பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சிம்லாவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் அதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் வடமாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. அதிலும் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இரு மாநிலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இமாச்சல பிரதேசத்தில் மட்டும் இந்த மழை தொடங்கியதிலிருந்து இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு ரூ 7000 கோடியாகும்.
இமாச்சலில் பிலாஸ்பூர், சம்பா, ஹமீர்பூர், காங்ரா, குலு, சிம்லா, கினார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. உத்தரகாண்ட்டில் 6 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சோலன் மாவட்டத்தில் ஜடோன் கிராமத்தில் மேக வெடிப்பு ஏற்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியாகிவிட்டனர்.
வெள்ளத்தில் இரு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில் 6 பேரை உயிருடன் மீட்டதாக மீட்பு படையினர் தெரிவிக்கிறார்கள். சிம்லாவில் சம்மர்ஹில் பகுதியில் ஒரு சிவன் கோயில் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தின் போது கோயிலில் 50 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது. நிலச்சரிவு அபாய பகுதிகள், ஆறுகள், நீர் நிலைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இமாச்சலம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இமாச்சலில் மொத்தம் 621 கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. அது போல் பல இடங்களில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. இமாச்சலில் நிலச்சரிவு, கனமழையால் பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் சுதந்திர தின விழா எளிமையாக நடந்தது. கலாச்சார நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி ஆகிய புனிதத் தலங்களுக்குச் செல்லும் சாலைகள் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளன. இதன் விளைவாக, சார்தாம் யாத்ரா என்று அழைக்கப்படும் புனித தலங்களுக்கான யாத்திரை இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
இமாச்சலில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சிம்லாவில் இரு முறை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 14 உடல்களை மீட்டுள்ளனர். இமாச்சலில் கல்வி நிலையங்கள் வரும் 19 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. அது போல் சிம்லாவில் நாளை வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்லா, ஃபதேபூர், இந்தோராஸ காங்கரா மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகளில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த 5 நாட்களுக்கு மலை பிரதேசங்களான இமாச்சல், உத்தரகாண்டில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இமாச்சலில் நீர் நிலைகளுக்கு அருகே உள்ள வீடுகள் சீட்டுக் கட்டு போல் சரிந்து நீரில் அடித்து செல்லப்படுகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications