ம.பி சிவன் கோவில் நிலச்சரிவில் சிக்கி 3 பக்தர்கள் பலி; முழு வீச்சில் மீட்புப்பணி
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஒன்றின் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மபி, ஜபல்பூர் அருகே அமைந்துள்ள மாவட்டம் சிந்த்வாரா. இங்கு பிரசித்தி பெற்ற சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. பொதுவாகவே வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக மபியைச் சுற்றியுள்ள சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும்.
4-5 people believed to be trapped after a landslide near Shiv Temple in Chhindwara(MP) pic.twitter.com/BTG5oWI7LG
— ANI (@ANI_news) March 7, 2016
இந்நிலையில் மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.பக்தர்கள் கூட்டம் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் 5 பக்தர்கள் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து அவர்களை மீட்க மத்திய பிரதேச மீட்புப்படையினர் விரைந்துள்ளனர். இதுகுறித்த மேலும் தகவல்கள் சேகரிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் பலியானவர்கள் விவரம் தெரியவந்து உள்ளது. டோலி பாண்டே, நிகிதா பாண்டே, சர்தீப் ஆகிய 3 பேர் இந்நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications