பால் தாக்கரேவை கொல்ல முயன்றது லஷ்கர் இ தொய்பா.. ஹெட்லி வாக்குமூலம்
மும்பை: சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை கொல்ல லஷ்கர் இ தொய்பா முயற்சித்ததாக டேவிட் கோல்மேன் ஹெட்லி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டேவிட் ஹெட்லி, வீடியோ கான்பரன்சிங் மூலமாக மும்பை கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த நிலையில் இன்று அவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக குறுக்கு விசாரணை நடைபெற்றது. நான்கு நாட்கள் இது நடைபெறவுள்ளது.

இந்த குறுக்கு விசாரணையின்போது சிவசேனா தலைவரான மறைந்த பால் தாக்கரேவை கொல்லை லஷ்கர் அமைப்பு திட்டமிட்டதாக அவர் கூறினார். அவரது வாக்குமூலத்திலிருந்து:
பால் தாக்கரேவைக் கொல்ல லஷ்கர் இ தொய்பா திட்டமிட்டது. இதுறித்து நானும் கேள்விப்பட்டேன். ஆனால் அதுகுறித்த விவரம் எனக்குத் தெரியவில்லை.
இந்த முயற்சி தோல்வி அடைந்து விட்டது. தாக்கரேவுக்கும் எதுவும் நேரிடவில்லை. தாக்கரேவைக் கொல்ல முயன்ற நபர் போலீஸ் பிடியில் சிக்கிக் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் பின்னர் தப்பி விட்டார் என்று கூறினார் ஹெட்லி.
ஹெட்லி முன்பு அளித்த வாக்குமூலத்திலும் கூட சிவசேனா குறித்துக் கூறியிருந்தார். அப்போது அவர் கூறுகையில், மும்பையில் உள்ள சிவசேனா பவனை உளவு பார்க்குமாறு நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். 2 முறை நான் அங்கு போயிருந்தேன். சஜித் மிர் கேட்டுக் கொண்டதால் சென்றேன். இருப்பினும் நான் கொடுத்த தகவல்களை பால் தாக்கரே விவகாரத்தில் அவர்கள் பயன்படுத்தி் கொண்டார்களா என்பது தெரியவில்லை.
மேலும் நான் ஒரு சிவசேனா நபருடன் நட்பு ஏற்படுத்திக் கொண்ட பின்னர்தான் சிவசேனா பவனுக்குச் சென்றேன். அவர் மூலமாகவே பல தகவல்களை நான் சேகரித்தேன் என்றார் ஹெட்லி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications