ஜல்லிக்கட்டு விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும்... ஆனால் உகந்த நேரம் இது இல்லை- உச்சநீதிமன்றம்!
டெல்லி: ஜல்லிக்கட்டில் காளைகளை ஈடுபடுத்த அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு விதித்த தடையை உடனே நீக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கை ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று திருவட்டாறு பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன் ராமகிருஷ்ணன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என். ராஜாராமன், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் இல்லத்தில் சென்று முறையீட்டு மனுவை விசாரணைக்கு அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

எனினும், ஜல்லிக்கட்டு விவகாரத்தை விசாரிக்கும் நீதிபதிகளிடம் முறையிடும்படி ராஜாராமனை தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். இதன்படி, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வழக்கறிஞர் ராஜாராமன் ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், "காளைகள் வதைபடுவதைத் தடுக்கும் வகையில், 2011 இல் மத்திய அரசு வெளியிட்ட அரசாணை மீது விரிவாக விசாரித்த பிறகே 2014 இல் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு பல்வேறு தகவல்களை மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதை நீதிமன்றம் வரவேற்கிறது. காளைகளை குடும்பத்தில் ஒருவராகவும் செல்லக் குழந்தையாகவும், தெய்வமாகவும் கருதுவதாகக் கூறினால், அதை எப்படி வேறு மாநிலத்துக்கு சம்பந்தப்பட்டவர்களால் விற்க முடிகிறது? மனுதாரர் தரப்பு வாதத்தின்படி புதிய சூழ்நிலைகளும், விதிகளும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சாதகமாக இருப்பதால், இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டிய அவசியத்தை நீதிமன்றம் உணருகிறது.
ஆனால், அதற்கு தற்போது உகந்த நேரம் கிடையாது. எனவே, ஜல்லிக்கட்டு தொடர்பான இடைக்காலத் தடை உத்தரவை நீக்க முடியாது. இப்போட்டிகள் தொடர்பாக ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் போது, மனுதாரர் தரப்பு தனது வாதத்தை முன்வைக்க அனுமதி அளிக்கிறோம்" என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications