சிபிஐ சுதந்திரமாக செயல்பட்டதாலேயே ரஷீத்துக்கு தண்டனை கிடைத்துள்ளது: காங்.
டெல்லி: சிபிஐ சுதந்திரமாக செயல்பட்டதாலேயே முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ரஷீத் மசூத்துக்கு தண்டனை கிடைத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் ரஷீத் ஆல்வி கருத்து தெரிவித்துள்ளார்.
ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமது எம்.பி. பதவியை அவர் இழந்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி, சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது. சிபிஐ சுதந்திரமாக செயல்பட்டிருக்கிறது என்பதும் வெளிப்பட்டிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சிதான் சிபிஐ அமைப்பை மத்திய அரசு தமக்கு சாதகமாக பயன்படுத்துகிறது என்று சொல்கிறது. ஆனால் ரஷீத்தின் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதில் இருந்து அந்த புகார் பொய்யானது என்பது நிரூபணமாகியுள்ளது என்றார்.
இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் ஷானவாஸ் ஹூசைன் கருத்து தெரிவிக்கையில், ஊழல் செய்வோர் இப்போது அச்சப்பட வேண்டும். சட்டம் நிச்சயம் அவர்களைத் தண்டிக்கும் என்பதை உணர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications