டெல்லி கற்பழிப்பு வழக்கு: 2 குற்றவாளிகளின் வக்கீல்கள் வழக்கிலிருந்து திடீர் விலகல்
டெல்லி: டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் இருவர் சார்பில் வாதாடி வந்த இரண்டு வழக்கறிஞர்கள் திடீரென வழக்கிலிருந்து தாமாகவே விலகியுள்ளனர்.
டெல்லியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சிறை வளாகத்திலேயே குற்றவாளி ஒருவன் தற்கொலை செய்துகொண்டான். பின்னர் மீதமுள்ள 5 குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதால் அவனுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி சிறார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து, மற்ற 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனை பெற்ற 4 பேரில், வினய் சர்மா, அக்சய் தாக்கூர் ஆகியோர் ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். மற்ற குற்றவாளிகளான முகேஷ் மற்றும் பவன்குமார் குப்தா இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை.
இந்நிலையில், முகேஷ் மற்றும் பவன்குமார் குப்தா ஆகியோரின் வழக்கறிஞர்களான வி.கே.ஆனந்த் மற்றும் விவேக் சர்மா ஆகியோர் அதிரடியாக தாங்கள் இந்த வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து வி.கே.ஆனந்த் ஹைகோர்ட்டில் நேற்று ‘தனது பணியில் குற்றவாளியின் குடும்பத்தினரும், சில வழக்கறிஞர்களும் குறுக்கிடுவதாகவும், எனவே தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார். இதனை நீதிபதிகள் ஏற்றனர்.
இதேபோல் பவன் குமாரின் வழக்கறிஞரான விவேக் சர்மா, தொலைபேசி மூலம் தனது விலகலை கோர்ட்டுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குற்றவாளிகளான முகேஷ் மற்றும் பவன்குமாரின் வழக்கறிஞர்கள் திடீரென விலகியதையடுத்து, அவர்களுக்காக பாரபட்சமற்ற ஆலோசகரை நியமிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications