ஜெயலலிதா சிறையில் வக்கீல்கள்.. 'அம்மா' உடல் நிலை சர்டிபிகேட்டை வாங்கி சென்றனர்
பெங்களூர்: உடல் நிலையை காரணம் காண்பித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கேட்கப்பட்டுள்ள நிலையில், அவரது மருத்துவ சான்றுகளை பெங்களூர் சிறையில் இருந்து வக்கீல்கள் பெற்றுச் சென்றனர்.
ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. ஜெயலலிதாவுக்கு உடல் நிலை சரியில்லை என்பதை காரணம் காண்பித்து ஜாமீன் கேட்கப்பட்டுள்ளது.

எனவே, உடல் நிலை மோசமாக இருப்பதாக கூறும் ஆவணங்களை சேகரிக்கும் முயற்சியில் அவர் தரப்பு வக்கீல்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக, ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலைக்கு வந்த அவர் சார்பு வக்கீல்கள் இருவர், சிறைச்சாலை மருத்துவர்களிடமிருந்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்த ஆவணங்களை கேட்டுப் பெற்றனர். இதேபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரின் சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளன.
இந்த மருத்துவ சான்றில், ஜெயலலிதா உள்ளிட்ட தண்டனை பெற்ற நால்வரின், எடை, ரத்த அழுத்தம், சுகர் அளவு உள்ளிட்ட அம்சங்கள் இருந்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மருத்துவ சான்றிதழ் பெற வந்த வக்கீல்கள், ஜெயலலிதாவை சந்தித்து பேசியதாக தெரிகிறது. ஜெயலலிதாவை அதிக தூரம் நடக்கவிடாமல் அவர் வக்கீல்களை சந்திக்க உரிய இடத்தை சிறை அதிகாரிகள் செய்து கொடுத்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பின்போது, வழக்கின் நிலை, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications