என்னை வீட்டை விட்டு வெளியேற்றி கதவை மூடி விட்டார் லியாண்டர்- மனைவி ரியா புகார்
மும்பை: தனது மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று டென்னிஸ் ஸ்டார் லியாண்டர் பயஸ் கோரட்டை அணுகியுள்ள நிலையில் அவரது மனைவி ரியா பிள்ளை, லியாண்டர் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி கதவை மூடி விட்டதாக புகார் கூறியுள்ளார்.
ரியா - லியாண்டர் இடையே பிரச்சினையாகியுள்ளது. இருவரும் தனித் தனியே வசிக்க ஆரம்பித்துள்ளனர். ரியா, சஞ்சய் தத்தின் முன்னாள் மனைவி ஆவார்.
இந்த நிலையில் தனது மகளை தன்னிடம் ஒப்படைக்க்க கோரி குடும்ப நல கோர்ட்டை அணுகியுள்ளார் லியாண்டர். அதேசயம், ரியா பிள்ளை மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் லியாண்டர் மீ்து ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார் லியாண்டர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ரியா பிள்ளை கூறியதாவது...

பார்ட்டிக்குப் போய் விட்டு வந்தபோது
நானும் எனது மகள் அயானாவும் ஒரு பார்ட்டிக்குப் போய் விட்டு எனது வீ்ட்டுக்கு வந்தோம். அப்போது ஐந்து பேர் வந்து எங்களை மறித்தனர். என்னை வீட்டுக்குள் நுழைய அவர்கள் அனுமதிக்கவில்லை. இதற்குக் காரணம் பயஸ்தான்.

ராணி முகர்ஜி வீட்டுக்கு
நானும் எனது மகளும் ராணி முகர்ஜி வீட்டில் நடந்த பார்ட்டிக்குப் போய் விட்டு திரும்பியபோதுதான் இது நடந்தது. நல்ல வேளையாக எனது மகள் அப்போது என்னுடன் இல்லை. இருந்திருந்தால் அதிர்ச்சி அடைந்திருப்பாள். லியாண்டர் தனது எல்லையை மீறி நடந்து கொள்கிறார்.

இது முதல் முறையல்ல
ஆனால் லியாண்டர் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு மார்ச் மாதம், லியாண்டரின் தந்தையும் அவரது பாடிகார்டுகளும் சேரந்து எனது பூஜை அறையை உடைதது உள்ளே புகுந்த சம்பவம் நடந்தது. மேலும் எனது கம்ப்யூட்டர்களையும் அவர்கள் ஹேக் செய்து பல ஆவணங்களைத் திருடிச் சென்றனர்.

என் வீட்டுக்குள்ளேயே அனுமதிக்கவில்லை
ஜூஹுவில் உள்ள வீடு என் வீடு. நான் வாங்கியது. அங்கேயே என்னை விடாமல் கதவை பூட்டி வெளியே நிறுத்தி விட்டனர் என்றார் ரியா பிள்ளை.

ஷாருக் கான் மனைவி ஆறுதல்
இதற்கிடையே சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் ஷாருக் கானின் மனைவியும் ரியாவின் தோழியுமான கெளரி கான் வந்து ஆறுதல் கூறினாராம்.
ரியா, லியாண்டர் சண்டை தெருவுக்கு வந்திருப்பதால் இருவரின் நண்பர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications