ஆம்புலன்ஸில் பறந்த இதயம்.. பெங்களூரில் பரபரப்பான அந்த 13 நிமிடங்கள்
பெங்களூர்: மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம், பெங்களூர் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனயைில் இருந்து எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு 12.45 நிமிடத்தில், ஆம்புலன்ஸ் வேனில் கொண்டு செல்லப்பட்டது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை பெங்களூர் போலீசார் செய்திருந்தனர். இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர் நகரில் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனயைில் இருந்து எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு இன்று மாலை மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் எடுத்துச் செல்லப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இதற்காக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் போலீசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

என்.ஆர் சந்திப்பு, கே.ஜி.ரோடு,மைசூரு பேங்க் சர்க்கிள், பழைய ஹைகிரவுண்ட் சாலை, சி.வி.ரமணன் ரோடு வழியாக எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு இதயம் கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டிருந்தனர். அதன்படி இன்று மாலை 5.45 மணி முதல் 6.45 மணி வரை அந்த வழியில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் ஒரே நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன்படி புற்றுநோய் சிறப்பு மருத்துவமனயைில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் 12.45 நிமிடத்தில் எம்.எஸ்.ராமையா மருத்துவமனையை அடைந்தது. இதற்காக ஒத்துழைத்த பொதுமக்களுக்கு பெங்களூர் போலீசார் நன்றி தெரிவித்துக்கொண்டனர். வாகன நெரிசல் நிறைந்த மாலை நேரத்தில் இதயம் ஆம்புலன்சில் எடுத்துச்செல்லப்பட்டது அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications