For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளிப் பாடமாகும் மோடியின் வாழ்க்கை வரலாறு- மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

போபால்: பிரதமராகும் மோடியின் வாழ்க்கை வரலாறு இன்னும் சிறிது நாட்களில் மத்திய பிரதேச பாடப் புத்தகங்களில் சேர்க்கப்படும் எனத் தெரிகின்றது.

இந்திய பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப்பாடத் திட்டத்தில் சேர்க்க மத்திய பிரதேச அரசு பரிசீலித்து வருகிறது.

Lessons on Modi's life in school curriculum

தேசப்பற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமும் கொண்ட மோடியின் வாழ்க்கை வரலாறு அனைவரையும் கவர்வதாக உள்ளதாகவும் இந்த தகவல்களை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆலோசனைகள் வந்துள்ளதாகவும் அந்த மாநில கல்வி மந்திரி பராஸ் ஜெயின் தெரிவித்தார்.

எனவே மோடியின் வாழ்க்கை வரலாறு, 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரையான பாடங்களில் சேர்க்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் கூறினார். சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் சாதனை படைத்த வரலாற்று தலைவர்கள் வாழ்க்கை போல, மோடியின் தேசநலன் நிறைந்த எண்ணங்களும், நடவடிக்கைகளும் இளைஞர்களுக்கு புகட்டப்பட வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

English summary
Lessons on the life of Narendra Modi may be included in the school curriculum with the Bharatiya Janata Party government in Madhya Pradesh considering such a proposal to "inspire" students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X