Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒடிசா ஐஏஎஸ் அதிகாரியை மணந்ததால் தலைகீழாக மாறிய விகே பாண்டியன் வாழ்க்கை.. 'நவீன்(ன)' வாரிசான பின்னணி

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை மணந்த தமிழனான விகே பாண்டியனை ஒடிசா அரசியலுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் எப்படி தேர்வு செய்தார் என்தை பார்ப்போம்.

அக்டோபர் மாதம் ஐஏஏஸ் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற விகே பண்டியன், திருகார்த்திகை நன்னாளில், நேரடியாக ஒடிசா முதல்வரின் வீட்டிற்கு சென்று, முதல்வர் நவீன் பட்நாயக்கின் பாதங்களைத் தொட்டு வணங்கி, "ஜெய் ஜகநாத்" என்று முழக்கமிட்டு, பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.

Lets see how Chief Minister Naveen Patnaik chose VK Pandiyan for Odisha politics

தமிழகத்தின் மதுரையை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் எனப்படும் விகே பாண்டியன், 2000 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் பஞ்சாப் மாநிலப் பிரிவின் ஐஏஎஸ் அதிகாரியாகத்தான் வெற்றி பெற்றார். ஆனால் ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை திருமணம் செய்ததால், ஒடிசா மாநில அதிகாரியாக இடம் மாறினார். ஒடிசா மொழியில் சிறப்பாக பேசக்கூடியவர். ஒடிசாவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர். முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 2011 முதல் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக விகே பாண்டியன் பணியாற்றி போது, முதல்வரிடம் நெருக்கமானார்.

அப்போது இருவரின் நெருக்கம் வளர்ந்தது. இதனால் 'நிழல்முதல்வர்' என்று பிஜேடி தலைவர்களே கூறும் அளவிற்கு நெருக்கம் வளர்ந்தது. சிலர்இதனால் அதிருப்தி அடைந்து, பிஜேடி கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார்கள். எனினும் நவீன் பட்நாயக்கை விகே பாண்டியனை எதற்காவும் ஒதுக்கி வைக்கவில்லை. தொடர்ந்து அதிக பொறுப்புகளை வழங்கி வந்தார். ஒடிசாவில் அரசியலாக இருந்தாலும் சரி, அதிகார மட்டமாக இருந்தாலும் விகே பாண்டியன் சொல்வது நடக்க தொடங்கியது. இந்நிலையில் தேர்தல் வரப்போகும் நிலையில், விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விகே பாண்டியன் பிஜேடியில் இணைவார் என்று கூறப்பட்டது. அதன்படியே கடந்த அக்டோபர் 23-ல் ஐஏஎஸ் பணியில் இருந்து விகே பாண்டியன் விருப்ப ஓய்வு பெற்றார். அவர் விருப்ப ஓய்வு கேட்ட இரண்டாவது நாளே மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்தது.

அதன்பின்னர் உடனடியாக ஒடிசா அரசின் முன்னோடி வளர்ச்சித் திட்டங்களின் தலைவராக கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் வி.கே.பாண்டியனை நியமித்து முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டார். இச்சூழலில், எதிர்பார்த்ததை போலவே வி.கே.பாண்டியன் திரு கார்த்திகை பவுர்ணமி நாளில் பிஜேடியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். நவீன் பட்நாயக் முன்னிலையில் விகே பாண்டியன் பிஜேடியில் இணைந்தபோது, கட்சியின் மூத்த தலைவர்களும் உடனிருந்தார்கள்.

இதுபற்றி முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், "உங்கள் அனைவருக்கும் தெரியும், விகே பாண்டியன் நம்முடைய ஒடிசா மாநில மக்களுக்காக பல ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்ததால், நமது மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளார். பிஜேடி கட்சி நிர்வாகியாக இனி அவர் ஒடிசா மக்களுக்காக தொடர்ந்து செயல்படுவார். நான் அவருக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

முதர்வர் நவீன் பட்நாயக்கிற்கு பதில் அளித்த விகே பாண்டியன், எல்லாம் உங்களுடைய ஆசிர்வாதம், வழிகாட்டுதல் மற்றும் உங்களுடைய ஆதரவு தான் தலைவரே.. உங்கள் ஆதரவுடன், ஒடிசா மக்களுக்கு நான் உண்மையாகவும், பணிவாகவும், தன்னலமின்றி சேவை செய்வேன் என்று கூறினார்.

விகே பாண்டியனை அரசியல் வாரிசாக நவீன் பட்நாயக் தேர்வு செய்தது ஏன்? 78 வயதாகும் நவீன் பட்நாயக், விகே பாண்டியனின் திறமை மீது அபரிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார். தொடர்ந்து ஒடிசாவன் ஐந்து முறை முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக், தன் காலத்திற்கு பிறகு இளம் தலைவர் ஒருவரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பாண்டியனை தேர்வு செய்திருப்பதாக ஒடிசா ஊடகங்கள் சொல்கின்றன. ஒடிசாவின் தலைவரும் தன தந்தையுமான பிஜு பட்நாயக்கின் மரணத்திற்கு 25 வருடமாக முதல்வராக உள்ள நவீன் பட்நாயக், தமிழரான விகே பாண்டியன் தான் சரியான அரசியல் வாரிசாக இருப்பார் என்று நினைத்து தேர்வு செய்திருப்பார் என்கின்றன ஒடிசா ஊடகங்கள்.

2019 லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது, பட்நாயக்கிடம் அவரது வாரிசு யார் என்று அடிக்கடி கேட்கப்பட்டிருக்கிறது. அப்போது அவருடைய பதில் என்ன வென்றால் இதனை "ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள்" என்று கூறியிருந்தார். நவீன் பட்நாயக்கின் மருமகன் அருண் பட்நாயக் அரசியல் வாரிசாக இருப்பார் என்று நினைக்க சில சந்தர்ப்பங்கள் நடக்கும் என்று பார்த்தார்கள். இருப்பினும், ஒருபோதும் அதற்கான சந்தர்பங்கள் நடக்கவில்லை. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பிஜேடி மேலிடம் விகே பாண்டியனை கட்சிக்கு உள்ளே கொண்டு வந்திருப்பது அவரது கட்சியினருக்கு மட்டுமல்ல , எதிர்க்கட்சிகளுக்கும், மக்களுக்கும் மிகப்பெரிய அரசியல் சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.

பிஜேடியின் முக்கியத் தலைவரும் புரி தொகுதி எம்.பி.யுமான பினாங்கி மிஸ்ரா கூறுகையில், "இது மிகவும் நல்ல வளர்ச்சி என்று நான் நினைக்கிறேன். ஒப்பற்ற அரசியல் சிந்தனை கொண்ட நவீன் பட்நாயக்குடன் மிக நெருக்கமாக பணியாற்றியதால், பரந்த நிர்வாக அனுபவத்தையும், மிக நேர்த்தியான அரசியல் திறமையையும் நவீன் பட்நாயக்கிடம் கொண்டு சென்றார். இதனால் பாண்டியன் ஒரு மாஸ்டரின் காலடியில் அரசியலை கற்றுக் கொள்ள வாய்ப்பினை பெற்றார். விகே பாண்டியனால் பிஜேடி பெரிதும் பயனடையும். மேலும், அவரது அனுபவம் மற்றும் புத்திசாலித்தனத்தால் அரசும் தொடர்ந்து பயனடையும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

அவர் மிகவும் கடின உழைப்பாளி. காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இடைவேளையின்றி வேலை செய்யக்கூடியவர். விகே பாண்டியன் கட்சிப் பொறுப்பு பின்னர் அறிவிக்கப்படும். தனது ஐஏஎஸ் பணிக்காலத்தை போல் கட்சிக்கும் அவர் வெற்றியை தேடித் தருவார் என நம்புகிறோம். இவரது இணைப்பால், கட்சியின் மற்ற தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். விகே பாண்டியன் வருகையால் பிஜேடிக்குள் எந்த அதிருப்தியும் இல்லை . அதேநேரம் பாண்டியனின் சேர்க்கை ஒரு வாரிசு திட்டமாக பார்க்கப்படக்கூடாது . நவீன் பட்நாயக் மீண்டும் முதலமைச்சராக ஆறாவது முறையாக வருவார். அதற்கு பாண்டியன் உதவுவார்" என்றார்.

பாண்டியனை கட்சிக்கு வரவேற்க முதலில் முதலமைச்சரின் இல்லமான நவீன் நிவாஸிலும், பின்னர் புவனேஸ்வரில் உள்ள பிஜேடியின் தலைமையகமான சங்க பவனிலும் அணிவகுத்து நின்ற கார்களை பார்த்து மிரண்டு போனார்கள் ஒடிசா மக்கள். இந்த கார்களின் அணிவகுப்பை பார்க்கும் போதே, பிஜேடியின் மற்ற மூத்த தலைவர்களின் கருத்தை மிஸ்ரா வெளிப்படுத்தியதாக தெரிகிறது. பாண்டியனுக்கு முதல்வரின் வெளிப்படையான ஒப்புதல் வலுவான அரசியல் சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.

அரசியலில் பின்னாளில் தனக்கு எதிராக வருவார்கள் என்று தெரிந்தால், அவர்களை அப்போதே முற்றிலும் ஓரங்கட்டிவிடுவார் நவீன் பட்நாயக். தன் பதவிக்கு ஆபத்து வந்தால், எதையும் செய்ய தயங்கமாட்டார். நவீன் பட்நாயக், சராசரி அரசியல்வாதியாக அல்லாமல், உணர்ச்சிவசப்படாமல் மிகச் சரியாக முடிவெடுப்பார். அப்படிப்பட்டவர் விகே பாண்டியனை தேர்வு செய்ய வலுவான காரணங்கள் இருக்கும் என்கிறார்கள் ஓடிசா அரசியல் நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+