டெல்லியில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கிறார் ஆளுநர்? ஆம் ஆத்மி கொந்தளிப்பு!
டெல்லி: பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க ஆளுநர் நஜீப் ஜங் அழைப்பு விடுக்கப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
70 எம்.எல்.ஏக்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 31 இடங்களைக் கைப்பற்றியது. 28 எம்.எல்.ஏக்களுடன் ஆம் ஆத்மி கட்சி 2வது இடத்தைப் பெற்றது. காங்கிரஸ் கட்சி 8 இடங்களைப் பெற்றது.
அதிக இடங்களை பாரதிய ஜனதா கைப்பற்றிய போதும் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வரானார்.

ஆனால் அந்த ஆட்சியும் நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி ராஜினாமா செய்தது. இதனால் டெல்லி சட்டசபை முடக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில்தான் திடீரென பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதற்கான முஸ்தீபுகளில் குதித்தது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களை ரூ20 கோடிக்கு விலைக்கு வாங்கிவிட்டதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார்.
தற்போது பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநர் நஜீப் எந்த நேரத்திலும் அழைப்பு விடுக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதாக அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆளுநர் இப்படி ஒரு அழைப்பு விடுக்கும் முடிவுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications