எல்ஐசி பங்குகளை விற்க வேண்டாம்.. தொடங்கியது ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டம்
டெல்லி: எல்ஐசியின் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளதை கண்டித்து எல்ஐசி ஊழியர் சங்கங்கள் நாடு தழுவிய போராட்டத்தை தொடங்கியுள்ளன.
எல்ஐசியில் உள்ள பங்குகளில் ஒரு பகுதியை விற்கும் அரசின் திட்டத்திற்கு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கான அறிவிப்பை கடந்த 1-ஆம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு சந்தை பிரிவில் அதிக பங்கு வைத்திருப்பது எல்ஐசிதான். இத்தகைய எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்தால் இதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும் என மக்கள் கருதுகின்றனர்.
இந்திய பொருளாதார வளர்ச்சியில் எல்ஐசி நிறைய பங்களிப்பை கொடுத்துள்ளது. எனவே இதன் பங்குகளை விற்பது தேசநலனுக்கு விரோதமானது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள எல்ஐசியின் 2048 கிளைகள், 114 அலுவலகங்கள், 8 மண்டல அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எல்ஐசியின் வகுப்பு 1 அதிகாரிகள் சங்கம் கூட்டமைப்பு, இந்திய காப்பீட்டு தொழிலாளர்கள் தேசிய கூட்டமைப்பு, அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் ஆகிய 3 அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எல்ஐசியில் 90 சதவீத ஊழியர்கள் இந்த 3 அமைப்புகளிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications