உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து.. உத்தரகாண்டிலும் சர்ச்சையை கிளப்பும் கான்வர் யாத்திரை ஆர்டர்!

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: சிவபக்தர்கள் யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள உணவகங்களுக்கு முக்கிய உத்தரவை உத்தரகாண்ட் அரசு பிறப்பித்திருக்கிறது. அதாவது உணவகத்தின் உரிமையாளர் பெயர், மொபைல் நம்பர் மற்றும் முகவரி ஆகியவை உணவகங்களின் பெயர் பலகையில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ஆண்டுதோறும் காவடி திருவிழா நடைபெறும். இதனை கன்வார் யாத்திரை என்று கூறுவார்கள். சிவ பக்தர்கள் காவடியை சுமந்துக்கொண்டு புனித நதியாக கருதப்படும் கங்கைக்கு சென்று புனித நீராடி, அங்கிருந்து புனித நீரை கலங்களில் கொண்டு செல்வார்கள். இப்படி கொண்டு செல்லப்படும் புனித நீரை கொண்டு தங்கள் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான காவடி திருவிழா தொடங்கியுள்ளது.

yogi adityanath uttar pradesh

இப்படி இருக்கையில் கங்கை நோக்கி செல்லும் பக்கதர்களுக்காக, இந்த வழித்தடங்களில் உள்ள அனைத்து உணவகங்களின் பெயர் பலகைகளிலும், அதன் உரிமையாளர் பெயர், மொபைல் நம்பர் மற்றும் முகவரி இடம்பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவு பிறப்பிக்க இருக்கிறது. முதல்கட்டமாக முசாஃபர் நகர் மாவட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறத. விரைவில் மாநிலம் முழுவதும் இது அமல்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டு வருகிறது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக பொருளாதார தடைகளுக்கு சமமாக இந்த உத்தரவு இருக்கிறது என விமர்சித்துள்ளனர். பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்திலிருந்தும் இதற்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி, "மதம் மற்றும் சாதிய ரீதியில் எந்த உத்தரவும் இருக்கக்கூடாது. உ.பியின் பைசாஃபாத் நகரில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தும் எனவே அதை வாபஸ் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல, மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பஸ்வான், "சாதி, மதம் அடிப்படையிலான எந்த பிளவையும் ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தரப்பில், "இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக புறக்கணிப்பதை நோக்கமாக கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது" என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறியுள்ளார்.

இவ்வளவு எதிர்ப்புகள் எழுந்திருந்தாலும், உத்ரகாண்டடிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது. ஹரித்துவாருக்கு காவடி எடுத்துச் செல்வோருக்கு உதவியாக இந்த உத்தரவு இருக்கும் என்று அம்மாநில ஆளும் கட்சி தலைவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+