இந்தியாவில் இதுவரை நடந்த தொடர் குண்டுவெடிப்புகள்....
டெல்லி: நேற்று பீகார் மாநிலம் பாட்னாவில் அடுத்தடுத்து 7 இடக்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும், காயமடைந்த 80க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரை இந்நியாவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளையும், அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தவர்களை பற்றிய ஒரு தகவல் தொகுப்பு...

மும்பை குண்டுவெடிப்பு....
கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மும்பையில் 13 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி சுமார் 257 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்.

தீபாவளி அசம்பாவிதம்....
2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் நாள் தீபாவளி திருநாளன்று டெல்லியில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 68 பேர் உயிரிழந்தார்கள்.

ரயிலில் குண்டுவெடிப்பு....
கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பையில் ஓடும் ரயில் அடுத்தடுத்து 7 குண்டுகள் வெடித்ததில் 200 பேர் பலியானார்கள்.

ஹைதராபாத்...
2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் நாள் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி 30 பேர் உயிரிழந்தார்கள்.

ஜெய்ப்பூரில்....
கடந்த 2008ல் மே 13ம் தேதி ஜெய்ப்பூரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 68 பேர் பலியானார்கள்..

அகமதாபாத்....
அதே ஆண்டு ஜூலை 26ம் தேதி அகமதாபாத்தில் 20 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 57 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

டெல்லியில்....
அதேவருடம் செப்டம்பர் மாதம் 13ம் தேதி டெல்லியில் 6 இடங்களில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 26 பேர் பலியானார்கள்.

அசாம்....
அக்டோபர் 30ம் நாள் அசாமில் 18 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி 77 பேர் மரணமடைந்தார்கள்..

மும்பை....
நவம்பர் மாதம் 26ம் நாள் மும்பையில் 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 168 பேர் பலியானார்கள்..

மும்பை....
கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மும்பையில் 3 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 26 பேர் உயிரிழந்தார்கள்.

புத்தகயா....
ஜூலை மாதம் 7ம் தேதி பீகாரின் புத்த கயா கோயிலில் 9 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் சிக்கி 6 புத்தத் துறவிகள் காயம் அடைந்தனர்.

பாட்னா குண்டுவெடிப்பு....
நேற்று (அக்டோபர், 27) பாட்னாவில் அடுத்தடுத்து 7 இடங்களில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் சிக்கி6 பேர் பலி, காயமடைந்த 80க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications