அமெரிக்க கைதிகளை விட "மோசமான" நிலையில் மும்பை மக்கள்!
மும்பை: உலகிலேயே மக்கள் அடர்த்தி அதிகமுள்ள நகரம் மும்பை தான் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முக்கிய பெரு நகரங்களில் ஒன்று மும்பை. வேலை உள்ளிட்ட பல காரணங்களுக்காக இங்கு குடியேறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையின் மக்கள் அடர்த்தியைக் குறைக்க மும்பையின் ப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ் திட்டமிட்டது. ஆனால், அத்திட்டம் நடைபெறவில்லை.

மும்பையில் குடியேறும் மக்கள்...
தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக மும்பையில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணம் வாய்ப்புகளை வாரித் தரும் நகரமாக மும்பை இருப்பது தான்.

சொந்த ஊராக்கும் முயற்சி...
இவ்வாறு மும்பையில் குடியேறும் மக்கள், அதனை தங்கள் சொந்த வீடாக்க முயற்சிக்கிறார்கள். இதனால், வசதி படைத்தவர்கள் அங்கு சொந்த வீடு வாங்குகிறார்கள், மற்றவர்கள் சேரிப் பகுதியை உருவாக்கி விடுகிறார்கள்.

மக்கள் அடர்த்தி அதிகம்...
இதனால், உலகிலேயே மும்பையில் தான் அதிகளவு மக்கள் தொகை அடர்த்தி காணப்படுகிறது. இவ்வாறு மக்கள் தொகை அதிகரிக்கும் போது மக்களுக்குத் தேவையான இடவசதியை அதிகரிப்பது மற்ற நகரங்களில் வாடிக்கை. ஆனால், மும்பையில் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்தும் வகையில் இந்த அளவானது மாற்றம் செய்யப்படாமலேயே உள்ளது.

அமெரிக்க சிறையை விடக் குறைவு...
மும்பையில் சராசரியாக ஒரு குடிமகனுக்கு 48 சதுர அடி என்ற அளவே வசிக்க இடம் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது அமெரிக்க சிறைகளோடு ஒப்பிடுகையில், அதை விட மிகக் குறைவாகவே உள்ளன. ஆம், அமெரிக்க சிறைகளில் தனியொரு கைதிக்கு 45 முதல் 60 சதுர அடி வரை இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.

செலவிற்கு தக்க வருமானமில்லை...
இந்தியாவின் மற்ற நகரங்களோடு ஒப்பிடுகையில் மும்பையில் செலவிற்கு தக்க வருமானமில்லை. சராசரியாக மும்பை வாழ் இந்தியர் ஒருவர் 308.1 ஆண்டுகள் உழைத்தால் மட்டுமே 100 சதுர மீட்டர் குடியிருப்பு வாங்க இயலும் என்கிறது இந்த புள்ளி விபரங்கள். ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இதே போன்று வீடு வாங்க, அமெரிக்கர்கள் 48.4 ஆண்டுகள் உழைத்தாலே போதுமானது.

அதிகரிக்கும் சேரிப்பகுதி...
மும்பையில் சரிபாதி மக்கள் சேரிப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு மும்பையில் சேரிப்பகுதியின் அளவு அதிகரித்து வருகிறது. இங்கு வாழும் மக்களின் வருமானது சராசரி இந்திய குடிமகனின் வருமானத்தை விட கூடுதலாகவே உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications