16 வயது சிறுமியை காட்டில் சீரழித்த 9 பேர்.. ஊரடங்கையும் மீறி.. கொரோனாவுக்கும் பயப்படாமல்.. அட்டகாசம்
16 வயது சிறுமியை 9 பேர் பலாத்காரம் செய்துள்ளனர்
ஜார்கண்ட்: ஊரடங்கின்போது உதவி என்று கேட்ட 16 வயது சிறுமியை 9 பேர் காட்டுக்குள் தூக்கி சென்று சீரழித்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது!
நாடு முழுவதும் லாக் டவுனில் உள்ளது.. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்களும் அதற்கு ஒத்துழைப்பு தந்து வருகின்றனர். அதனால் ரோட்டில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி உள்ளது.. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீடுகளிலிருந்து ஓரிருவர் வந்து செல்கிறார்கள்.

இந்த ஊரடங்கினை பயன்படுத்தி கொண்டு ஒரு அக்கிரம செயல் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.. கடந்த 24-ம் தேதி ஊரடங்கு உத்தரவு என்று பிறப்பிக்கப்படவும், ஏராளமானோர் சொந்த ஊருக்கு கிளம்பினர்.. அப்போது மாலை இருட்டு நேரத்தில், 16 வயதுடைய சிறுமி ஒருவர் தன் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தார்.. போக்குவரத்து வசதி எதுவுமே அந்த பகுதியில் இல்லை.. அதனால் தன்னுடைய ஆண் நண்பருக்கு போன் செய்து உதவி கேட்டதாக தெரிகிறது.
அந்த ஆண் நண்பரும் ஊரடங்கு சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டார்.. கிளம்பி வரும்போதே 8 நண்பர்களை தன்னுடன் கூடவே அழைத்து வந்தார்.. பின்னர் சிறுமியிடம் "வழியெல்லாம் ஊரடங்கு கெடுபிடி இருக்கு.. ரோடு வழியாக நாம போக முடியாது.. போலீஸ் இருப்பாங்க.. காட்டு வழியிலே போயிடலாம்" என்று சொல்லி உள்ளார்.
எப்படியே வீடு போய் சேர்ந்தால் போதும் என்று நினைத்து அதற்கு சம்மதித்துள்ளார் சிறுமி. நடுக்காட்டிக்கு போனதுமே சிறுமியை ஆண் நண்பர் உட்பட 9 பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளனர்.. மேலும் சிறுமியை அந்த காட்டுக்குள்ளேயே அப்படியே விட்டு விட்டும் சென்றுள்ளனர். நடுக்காட்டில், இருட்டில் வழி தெரியாமல் அழுதுள்ளார் சிறுமி.
பிறகு தட்டுத்தடுமாறி நடந்தே வீடு வந்து சேர்ந்து பெற்றோரிடம் கதறி உள்ளார்.. இதையடுத்து போலீசார்தான் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. பெண்ணை சீரழித்தவர்கள் மீது புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த 9 பேரையும் இப்போது காணோம்.. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications